தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய...

மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிணை!

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆசிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக மன்று உத்தரவிட்டது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
Ad Widget

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு நாட்டில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!!

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் குறித்த திட்டத்தை நடைமுறைக்கு...

எனது கருத்தை கேட்டிருந்தால் விடுதலைப்புலிகளின் தலைவரை இழந்திருக்க மாட்டோம்: டக்ளஸ்

"நான் 87ம் ஆண்டு சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரன் அடங்கலாக இவ்வளவு அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் வந்திருக்காது" என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாணங்களிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என தமிழ்த்தரப்புக்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான முயற்சிக்கு மத்திய...

இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இலங்கையில் இன்றைய தினம் விடுமுறையிலுள்ள அரச பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு அபாயம் உள்ள பிரதேசங்களாக 74 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...

பிரித்தானியா சென்ற உக்ரைன் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பிரித்தானியாவில் அகதிகளாக குடியேறிய உக்ரைன் நாட்டவர்கள் பலர் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பலருக்கு தங்குமிடம் கிடைக்காததால் அல்லது அவர்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்து போனதால், வீடற்றவர்களாகவோ அல்லது வீடற்ற நிலைக்கு ஆளாகவோ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் மொத்தம் 660 உக்ரேனிய குடும்பங்கள்...

உக்ரைனில் தானியங்களை திருடிய ரஷ்யா!! – வெளியான புகைப்படங்கள்!!

உக்ரைனில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்கள் சிரியாவுக்குக் கொண்டு சென்றதாக செயற்கைக்கோள் பட நிறுவனமான Maxar அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் என்ற இடத்தில் இரண்டு ரஷ்யக் கொடியிடப்பட்ட கப்பல்களில் தானியங்கள் ஏற்றப்பட்டிருப்பதை படங்கள் காட்டுவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், சில நாட்களுக்குப் பிறகு, சிரியாவில்...

நாளை நாடு முழுவதும் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

நாட்டின் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை!!

தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்படப் போகும் உணவுத் தட்டுப்பாட்டுக்குத்...

நீடிக்கப்படுகின்றது மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை?

தற்போதைய மின்வெட்டினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை மறுதினம் முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையே இதற்கான காரணம் என...

எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்க நடவடிக்கை!

வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ், லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என குறிப்பிட்டுள்ளார். அடுத்த நான்கு மாதங்களுக்கு ஓமானில் உள்ள நீண்ட கால...

யாழ்- கொழும்பு விசேட புகையிரத சேவை நாளை ஆரம்பம்!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த சாரதி மரணம்!

பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 55 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி மருத்துவமனை பெண் தாதிய உத்தியோகத்தருக்கு கொலை அச்சுறுத்தல்!!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவுக் கடமையிலிருந்த போது தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவமனை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், சாவகச்சேரி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் விசாரணைகளை...

வெள்ளிக்கிழமை விடுமுறை நீதிமன்றங்களுக்கு வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசருக்கு கடிதம்

அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், நீதிமன்ற செயற்பாடுகளை தடை இன்றி முன்னெடுத்து செல்ல, நீதிமன்றங்கள் வெள்ளிக் கிழமைகளில் இயங்கும் நிலைமையை அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவிடம் கோரப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதற்கான கோரிக்கையை கடிதம் ஊடாக பிரதம நீதியரசருக்கு அறிவித்துள்ள நிலையில்,...

இலங்கையில் 66 சதவீதமானோர் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டுள்ளனர்!!

உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 66 சதவீதமானோர் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன் விளைவாகப் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் தோற்றம்பெற்றுள்ளன. அந்தவகையில் உணவுப்பாதுகாப்புத் தொடர்பில் உலக உணவுத்திட்டமும் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைந்து கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ச்சியான ஆய்வினை...

எரிவாயுவை ஏற்றிய இறுதி கப்பல் இன்று நாட்டிற்கு!!

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் எரிவாயுவை ஏற்றிய இறுதி கப்பல் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலில் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. எவ்வாறிருப்பினும் இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை...

உக்ரைனில் இரண்டு அமெரிக்கர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிப்பு!!

உக்ரைனில் இரண்டு அமெரிக்கர்கள் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் அமெரிக்கப் படைவீரர்களான 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 28 வயதான ஆண்டி ஹுய்ன் ஆகியோர் உக்ரைனில் சண்டையிட்டபோது சிறைபிடிக்கப்பட்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. இந்த தகவலட உறுதிசெய்யப்பட்டால், போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய போர்க் கைதிகளாக மாறிய முதல்...

யாழ். – பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும்,பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் நேற்று முன்தினம் (13.06.2022) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர்...

இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் வரும் – லிட்ரோ தலைவர்

இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரும் என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் முன்னைய அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக விநியோகஸ்தர்களை தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னைய தலைமைத்துவம் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாததாலும் விநியோக விதிமுறைகளிற்கு ஏற்ப கட்டணங்களை செலுத்த முன்வராததாலும் கடல்கள் இன்று...
Loading posts...

All posts loaded

No more posts