Ad Widget

இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட 24 வெளிநாட்டு கம்பனிகள் விருப்பம் – காஞ்சன

இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு 24 வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்களே இவ்வாறு இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சனா விஜேசேகர டுவிட்டர் பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு குறித்த நிறுவனங்களின் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, முன்மொழிவுகளுக்கான கோரிக்கையை வெளியிடும். அத்தோட 6 வாரங்களுக்குள் அந்த செயல்முறையை குறித்த குழு இறுதி செய்யும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட மாதிரியின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து வழங்கும் அதே நேரத்தில் போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதிகள் உள்ளிட்டவை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும். இதற்காக அரசாங்கம் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து சேவைக் கட்டணத்தைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts