- Wednesday
- July 8th, 2026
கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமைகளை வென்றெடுத்த பிரதிநிதிகளின் மாநாட்டில்...
உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டேவிடிவ் பிரிட் மீது உக்ரைனியக் கொடியை 35ஆவது கடற்படையினர் ஏற்றுவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது. அத்துடன், மற்றொரு ரஷ்ய இராணுவப் பின்வாங்கலை தொடர்ந்து, அருகிலுள்ள பல கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக...
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முல்லைத்தீவில் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த பொலிஸார்...
அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவு...
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4 ஆயிரத்து 280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ஆயிரத்து 720 ரூபாவாக காணப்படுகின்றது. மேலும் லிட்ரோ...
நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால், யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படை வாகனம் விபத்தில்...
தொலைபேசி நிறுவனங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன. 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிடவுள்ளன.
இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பெக்கெட்டின் விலை 850 ரூபாயில் இருந்து 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோ பால் மா பெக்கெட்டின் புதிய விலை 2350 ரூபாவாகும். முன்னதாக ஒரு கிலோ பால் மா...
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில்...
மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிற்கும் உக்ரைனின் மேற்கத்திய நட்பு...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் இது குறித்த அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இலங்கை பெற்றோலிய விநியோகஸ்த்தர் சங்கத்தினர் இன்றைய தினம் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்....
அதியுயர் பாதுகாப்பு வலயப்பிரகடன வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ததைப்போன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார். 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் கொழும்பிலுள்ள சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி கடந்த செப்டெம்பர் மாதம்...
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமானவை என அடையாளம் காணப்பட்ட சில சேவைகளுக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம் தொடர்பான சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல...
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஒக்டோபர் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்காக ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடவேண்டி உள்ளதாலும் காகித தட்டுப்பாடு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்...
காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப் பணம் விதித்ததுடன், ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை...
Loading posts...
All posts loaded
No more posts
