- Sunday
- May 4th, 2025

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் கண்டன போராட்டத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (more…)

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் உட்பட சகல வாகனங்களும் இராணுவத்தினரால் ஏலவிற்பனை மூலம் விற்கப்பட்டு வருகின்றன என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. (more…)

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் தெற்கு பிரதேசச சபை தவிசாளர் பிரகாஸ் தெரிவித்தார். (more…)

இலங்கையில் தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாகக் கூடி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்கள இராணுவத்தின் உளவுப் பிரிவினரும், காவல்துறையினரும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸுடன் இணைந்து வைத்தியசாலையில் கடமையாற்றும் தொண்டர்களுக்கு ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சென். ஜோன்ஸ் அம்புலன்ஸின் யாழ்.மாவட்ட ஆணையாளர் செ.செல்வரஞ்சன் தெரித்துள்ளார். (more…)

வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்று முக்கியமான இடங்கள் சுற்றுலாப்பயணணிகள் அறிந்து கொள்ளும் வகையில் யாழ் கோட்டைக்குள் கண்காட்சி கூடம் அமைக்கப்படவுள்ளது.தொல்லியல் திணைக்களத்தால் இக் கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாண மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே அண்மையில் வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர் தின நிகழ்வுகளை தடுத்ததாக சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். (more…)

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை மற்றும் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த 24 வர்த்தகர்களுக்கு 47,500 ரூபா தண்டப்பணம், யாழ். மற்றும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார். (more…)

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு யாழ். பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் அத்தியட்சசகர் குணசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். (more…)

13ஆவது திருத்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியுடன் நேரடியாக பேசவேண்டுமே தவிர, வெளியில் நின்று பேசிக்கொள்வதால் எவ்விதமான பயனுமில்லை என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவுறித்தியுள்ளார். (more…)
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வேண்டுமே தவிர தமிழீழம் தேவையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்; கனகரத்தினம் விந்தன் தெரிவித்தார். (more…)

தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளைப் பறித்து அவர்களைத் தொடர்ச்சியாக ஒரு இராணுவ அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் நேக்கத்திலேயே நேற்றுமுன்தினம் யாழ். பல்கலைக்கழகச் சம்பவத்தை சிறிலங்காப் படையினர் அரங்கேற்றியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால் புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினரால் சபையில் முன்வைக்கப்பட்ட கண்டன பிரேரணையை நிறைவேற்ற யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். (more…)

அண்மைக்காலமாக ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளையும் மக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.இவ்வாறான தாக்குதல்களால் அரசியல் தீர்வு கேள்விக்குறியாக உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: (more…)

பல்கலைக்கழக விடுதிக்குள் இராணுத்தினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாகவோ அல்லது பொலிஸாரால் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை. முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் படையினரை அனுப்பியது யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இதற்கு உயர்கல்வி அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். (more…)

பொன்னாலை - திருவடிநிலையில் இரண்டு கிலோ மீற்றர் நீளமான கடற்கரை பிரதேசம் கடற்படையினரால் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, கடற்றொழிலுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமாகவுள்ள சிறியளவு கரையோரப் பகுதியிலும் கடற்றொழிலில் ஈடுபடக்கூடாதென கடற்படையினர் உத்தரவிட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். (more…)

All posts loaded
No more posts