Ad Widget

மீள்குடியேற்றம் தொடர்பாக வலி வடக்கு பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்

army_palaly1மண்டையோடுகளுக்கும் வெடிபொருட்களுக்கும் மத்தியில் முள்ளிவாய்க்காளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதும் வெடிபொருட்கள் அற்ற எங்கள் பிரதேசத்தில் ஏன் எங்களை அரசாங்கம் மீள்குடியேற்ற முடியாது?’ என்று வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேற்றப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பிலும் இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலி வடக்கு பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் வலிகாமம் வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இதன்போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

கடந்த 22 வருடங்களுக்கு மேல் தங்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து பல்வெறு இடங்களில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழந்து வருகின்றோம். சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கையைக் கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் எங்கள் வளமான பூமியில் வெடிபொருட்கள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தாலும் அரசாங்கதினாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் வெடிபொருட்கள் இருக்கும் இடத்தில் இன்று இராணுவம் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளும் போது ஏன் நாங்கள் மட்டும் அங்கு மீள்குடியேற முடியாது?
தற்போது இராணுத்தால் எமது பிரதேசத்தை அண்டிய பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி அப்பகுதியில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறிதரன், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்

Related Posts