- Thursday
- March 5th, 2026
உளவியல் ரீதியில் அச்சத்தை உண்டு பண்ணி ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். (more…)
யாழ். புத்தூர்ப் பகுதியில் தினக்குரல் பத்திரிகை நிறுவன பணியாளர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு, பத்திரிகைகள் எரியூட்டப்பட்ட மனித நேயமற்ற தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தெரிவித்துள்ளார். (more…)
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழில் கைது செய்யப்பட்ட 44 பேரும் தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (more…)
நாவற்குழியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சிங்கள மக்களால் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் அதனைச் சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரிப் பிரதேச சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமை குறித்துக் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
வீட்டில் தனியாக இருந்த குடும்பஸ்தர் மீது படையினர் மேற்கொண்டத்தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
யாழ். மாநகர சபைக்கு பொது மக்களால் செலுத்தப்படாமல் 2.1 மில்லியன் ரூபா வருமானம் இன்னமும் நிலுவையாக உள்ளதாக யாழ். மாநகர சபை தெரிவித்துள்ளது. (more…)
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தாண்டுபோன கடற்கலங்களால் அப்பகுதியில் தொழில் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாரட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். (more…)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், சம்மேளனத்தினை வழிநடத்தும் சிலரின் அரசியல் உள்நோக்கத்தினையும் கொண்டுள்ளதென யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களான ஷெய்க் ஏ.எஸ்.சுபியான் மற்றும் சரபுல் அனாம் ஆகியோர் கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். (more…)
தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புத்தூரில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் விநியோகிப்பதற்கு எடுத்துச்சென்ற பத்திரிகையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுக்கும் எரியூட்டப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த விநியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை (more…)
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவுின் உதவிப்பரிசோதகர் 5 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் நிக்கம்பிட்டிய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்படாமையினால் வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
யாழ். குடாநாட்டில் 24 மெகாவாற்ஸ் மின்சாரம் விநியோகம் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)
யாழ், மணியந்தோட்டம் வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எவ்விதமான அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். (more…)
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணியில் யாழ், மாட்டத்தில் 395 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. (more…)
யாழ். மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் மக்களுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, எதுவித உதவிகளையும் செய்யவில்லை (more…)
யாழ். மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவர் ராஜரட்னம் ராஜாராமிற்கு எதிராக சோசலிச சமத்துவ கட்சியின் சார்பில் யாழ். நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமு சம்பந்தன் தெரிவித்தார். (more…)
யாழ். நகரில் சிறிலங்காப் படையினரின் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து சேதங்களுக்குள்ளாகியது. (more…)
இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் இன்று சுதந்திரதினம் கொண்டாட முடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
