Ad Widget

தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையினால் மக்கள் பாதிப்பு

police_womenதமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்படாமையினால் வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்து விசாரணை நடாத்தக் கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது என வடக்கு மகளிர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனால் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏதேனும் ஒரு வகையில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்கள், ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் தங்களது முறைப்பாட்டை செய்ய வேண்டியுள்ளது என போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் அமைப்பின் ஜானி பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆண் உத்தியோகத்தர்களிடம் கருத்து வெளியிடுவதற்கு பெண்கள் தயங்குகின்றனர்.

இதனால் சரியான முறையில் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை செய்ய முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

அச்சத்துடன் அறைகுறையாக செய்யப்படும் முறைப்பாடுகளினால் குற்றம் இழைத்தவர்கள் நீதிமன்ற விசாரணைகளின் போது நன்மையடைகின்றனர்.

எனவே போதியளவு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வடக்கு பொலிஸ் நிலையங்களில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென ஜானி பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Related Posts