Ad Widget

கிளிநொச்சி யாழ். நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பேர் நேரடியாக நன்மை பெறவுள்ளனர்.

கிளிநொச்சி யாழ். நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பேர் நேரடியாக நன்மை பெறவுள்ளனர். குடிதண்ணீர் வழங்கல் மூலம் சுமார் 3 லட்சம் பயனாளிகளும் கழிவு நீர் அகற்றல் மூலம் 80 ஆயிரம் பயனாளிகளும் நீர்ப்பாசனம் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுமாக மொத்தம் 4 லட்சத்து 35 ஆயிரம்...

வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

சாவகச்சேரி சரசாலை பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதானா வைத்திசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றிக்கிழமை காலை 9.30 மணிக்கு சாவகச்சேரி சரசாலை பகுதியில் நடைபெற்றுள்ளது. (more…)
Ad Widget

வழி அனுமதி பெறாத பஸ்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள்

வழி அனுமதிப் பத்திரம் பெறாது வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பஸ்களுக்கு உயர் அதிகாரிகள் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இவ்வாறு கூறினார். யாழ்.மாவட்ட தனியார் பஸ் சாரதிகள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று பிராந்திய அலுவலகத்தில் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது....

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை...

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 65 ஆயிரம் பேர் மனநோயாளிகள்: சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநோயாளிகளாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று நாடாளுமன்றில் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க பதிலளிக்கும் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் எதற்காக இந்த ஆளுனர் மாநாடு நடைபெற்றது?

நீண்ட நாள் ஆரவாரத்திற்கு பின்னர் 15 ஆவது இலங்கை ஆளுனர்களின் மாநாடு நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த மாநாடு ஏன் எதற்காக நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னர். நடந்து முடிந்திருக்கின்றது. இதற்காக பல லட்சம் ரூபா பணம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. நேற்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை மூன்று நாள் குத்தகைக்கு எடுத்த...

சூறாவளி அச்சுறுத்தல்;கரையோர பிரதேசங்களிருந்து மக்கள் வெளியேற்றம்

முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள சுறாவளி, நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கைக்குள் உட்புக வாய்ப்புள்ளதால் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று கைவிடப்படலாம் உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று வியாழக்கிழமை கைவிடப்படலாம் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். (more…)

யாழ் மட்டுவில் பகுதியில் வீதி விபத்து தலை நசுங்கி பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணம் மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகாமையால் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர்  தலை நசுங்கி பலியாகியுள்ள   சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில்  உபகுழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது (more…)

இடர் முகாமைத்துவ அமைச்சர் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரவீர மீளக்குடியமர்ந்த மக்களுக்கு கூரைத்தகடுகளை வழங்கினர்  (more…)

யாழ் மாவட்ட வாக்காளர் பதிவு நடவடிக்கை ஒகஸ்ட்15ம் திகதி வரை நீடிப்பு

யாழ் மாவட்டத்தில் வாக்காளர் பதிவு நடவடிக்கை எதிர் வரும் ஒகஸ்ட் 15 ம்திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. என உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.இந்த வாக்காளர் அட்டை மீள் பதிவுக்கு கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புகாரணத்திலேயே  கால நீடிப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்குறிப்பிட்டார். (more…)

வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு அருகில் மது போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாடசாலைகளுக்கு அருகில் மதுபானமும் போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். (more…)

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று  திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இப்பரீட்சைக்காக  2 இலட்சத்து 70 ஆயிரம் பரீட்சார்திகள் தோற்றவுள்ளதுடன் 12 ஆயிரம் பரீட்சை  உத்தியோகத்தர்கள்  கடமைகளில் ஈடுபடவுள்ளனர். (more…)

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 வயது மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி மரணம் மாங்குளத்தில் சம்பவம்

மாகாண மட்ட புலமைப் பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த மாணவனை மோதி தள்ளிவிட்டுத் தலைமறைவாகியது மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்து இறந்தான். இந்தச் சம்பவம் நேற்று மாங்குளத்தில் இடம்பெற்றது. (more…)

ஒப்பந்த அடிப்படையில் 44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமாகாண பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது .கணிதம்,ஆங்கிலம் போன்ற பாடங்களில் அதிகமாக வெற்றிடங்கள் காணப்படும்  கல்வி  வலயங்களுக்கு குறித்த 44ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளர்கள்  இந்நிகழ்வில்  யாழ் .வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட வடமாகாண ஆசிரியர்கள்  பலர் கலந்து கொண்டனர் .

சமையலடுப்பு வெடித்ததால் எரி காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

சமையலடுப்பு வெடித்து சிதறியதால் எரியகாயங்களுக்குள்ளான இலக்காகிய பெண் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சிவன்  கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவர். (more…)

விடுதலைப்புலிகள் இன்மையே மாணவர்கள் சீரழிவுக்கு காரணம்

விடுதலைப்புலிகள் தற்போது  இல்லாத நிலையிலேயே மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும்  சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர்கள் கல்வி வீழ்ச்சிக்கு காரணம். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார். (more…)

அடியவர்களின் “அரோகரா” கோசத்துடன் நல்லுார்க் கந்தனின் கொடியேற்றம்

இன்று காலை 10 மணிக்கு ஆயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துடன் கோலகலமாகவும் பக்தி பூர்வமாகவும் நல்லுார்க் கந்தன் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

சுன்னாகத்தில் பிறந்த குழந்தையை குழி தோண்டி புதைத்த தாய்

யாழ் சுன்னாகம் கிழக்குப்பகுதியில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்று அதனை குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts