Ad Widget

வடக்கில் 42 குடும்பங்கள் பாதிப்பு:200 வீடுகள் சேதம்

kattuவடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் 42 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.இயற்கை அனர்த்தங்களினால் நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலை வேளையிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த மினி சூறாவளி மற்றும் இடி மின்னல் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்தில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நலன்புரி நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை மல்லாகத்தில் 15 குடும்பங்களும் கொல்லங்கலட்டியில் 27 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாயில் தலா நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஊறுகாவற்றுறை, சங்கானை மற்றும் தெல்லிப்பளை ஆகிய இடங்களில் சுமார் 200 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

Related Posts