தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் பலி!

தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன்...

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு!! – 09 பேர் கைது!!

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை, அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள்...
Ad Widget

எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் இல்லை!!

எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான இயலுமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு எரிபொருள் கோட்டா முறையில் மாற்றம் ஏற்படுத்தாதிருக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதேவேளை சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், எரிபொருள்...

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் வெடித்தது போராட்டம்!

தையிட்டியில் தமிழர்களின் காணிகளை பலவந்தமாக பறித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்றையதினமும் (22) தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பேச்சாளர் க.சுகாஸ் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விகாரையை எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக...

மாணவியுடன் அங்க சேஷ்டை செய்த தமிழ் இராணுவ சிப்பாய்!!

யாழ்.வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்று திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில்...

ஆசிரியைக்கு கடமை நேரத்தில் அழகு குறிப்பு கொடுத்த ஆசிரிய ஆலோசகர்!!

யாழ்.கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பாடசாலைக்குச் சென்று பெண் ஆசிரியையை பார்த்து கிறீம் பூசுவதில்லையா? பூசினால் அழகாக இருப்பீர்கள் என கூறிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியை உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார். நேற்றைய தினம் யாழ்.கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றுக்கு கடமை நிமித்தம் சென்றிருந்த குறித்த ஆசிரிய ஆலோசகர் எந்த அறிவிப்பும்...

யாழ்.பல்கலைகழக களஞ்சியத்திலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்!! விசாரணை நடக்கிறது!! – துணைவேந்தர்

யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டட உபகரணங்கள் காணாமல்போனமை தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறுகிறது என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்தில் இருந்த பொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெறுகிறது என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

யாழில் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேர் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரால் நேற்று (22.05.2023) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் ஹெரோய்ன் பயன்படுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனும் உள்ளடங்கியுள்ளார். அத்துடன் போதைப்பொருள்களை விநியோகிப்பவர் ஒருவரும் இதில் உள்ளடங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் டினிப்ரோ என்ற நகரின் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை போராடி முழுவதுமாக கைப்பற்றியதாக ரஷ்ய இராணுவத்தளபதி யெவ்கெனி பிரிகோஷின் பிரகடனம் செய்த நிலையில், அதற்கான ஆதாரத்தை வாக்னர் ஆயுதக்குழு வெளியிட்டுள்ளது. உக்ரைனின்...

இலங்கைக்கு சினோபெக் வருவது உறுதியானது!

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd...

யாழ். பல்கலை பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதியுங்கள்!! – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களை பதிவுசெய்வதற்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பும் அதிகாரம் பீடாதிபதிகளுக்கு இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரான சிரேஷ்ட...

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயல்வேன்!! குடிநீர் பிரச்சினை குறித்தும் அவதானம் செலுத்துவேன் – வடக்கு ஆளுநர்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத்தர முயல்வேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார். இன்றைய தினம் (22) உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இன்று என்னை வாழ்த்துவதற்கு வருகைதந்த மத குருமார் சில...

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் செயலத்தில் உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக மீண்டும் வைத்தியர் சிவரூபனை நியமிக்ககோரி போராட்டம்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் நியமிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் நேற்று(21) பிற்பகல் 2.30 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த வைத்தியரை மீண்டும் கடமையில் அமர்த்துவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுக்கு வாருங்கள் – ஜனாதிபதியிடம் சம்பந்தன்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நில...

இலங்கையில் திடீரென உயர்ந்த கொவிட் மரணங்கள் – ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு

இலங்கையில் இந்த ஆண்டு ஒரே நாளில் கோவிட் நோயாளிகள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை சனிக்கிழமை பதிவாகியுள்ளது. அதற்கமைய அன்னைறய தினம் 15 கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கைக்கமைய, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆகவும், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் உள்ளது....

உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா!

உக்ரைனில் மேலும் ஒரு முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த ஆண்டு முதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை 10 மாதம் போராடி முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய இராணுவத் தளபதி யெவ்கெனி பிரிகோஷின்...

வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி நியமனம்!!

வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இதற்கமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக...

தென் பசுபிக் சமுத்திரத்தில் நிலநடுக்கம்!! – சுனாமி எச்சரிக்கை!!

தென்பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 7.7 மெக்னிடியுட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுகெலிடோனியாவிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, வனவாட்டுவில் 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும்,...
Loading posts...

All posts loaded

No more posts