- Monday
- May 4th, 2026
எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஆதரவு வழங்குவதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஐயகாந் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் மன்னாரில் 5 ஆயிரம் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக செய்யப்படுவதாகவும் அந்நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும்; யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன், திங்கட்கிழமை (08) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலங்களிலும் அதற்கு பிற்பட்ட காலப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் இலங்கை அரசினால்...
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காக கிளிநொச்சியில் புதன்கிழமை இடம்பெறவிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் தின ஒன்றுகூடலில் செம்மஞ்சள் நிற ஆடைகளுடன் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், அக்கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திர விடுத்துள்ள ஊடக...
சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தற்போது அளவெட்டிக்கும் பரவியுள்ளது. அளவெட்டி மேற்கில் ஜே - 218 கிராம அலுவலர் பிரிவிலுள்ள கிணறு ஒன்றிலும் எண்ணெய் கசிந்துள்ளதாக வீட்டு உரிமையாளர், கிராமஅலுவலர் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால்...
தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா என்று, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இன்று புதன்கிழமை(10) முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசியல் சூழ்நிலையையடுத்து, அவர் இந்த முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது தொடர்பில் இன்று...
நாங்கள் மக்கள் நலன் கருதியே அரசியலில் உள்நுழைந்துள்ளோம். எமக்கு எமது மக்கள் நலமே முக்கியம். அவர்களின் விடிவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர்களின் சுதந்திரமும் சுபீட்சமும் எமது தாரக மந்திரங்களாகத் தொனிக்கட்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது....
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னர் அது குறித்து தீர்மானிக்கப்படும்.தேர்தல் தொடர்பாக கிராமம் கிராமமாக சென்று மக்களின் கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். எவ்வாறெனினும், இன்று...
இன்று (09) சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினமாகும்.கடந்த 2004 ஆம் ஆண்டு ஐ.நா பொதுக்கூட்டத்தின் போது டிசம்பர் 9ஆம் திகதி ஊழல் எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு ஊழல் எதிர்ப்புத் தினமானது 'ஊழல் சங்கிலியை உடைப்போம்' என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்க ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் அலுவலகம் தீர்மானித்துள்ளது. ஊழல் தொடர்பான விழிப்புணர்வு வகிபங்கு...
தமது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, யாழ்.பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் இன்று கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு, கல்விக்கான நிதி ஓதுக்கீட்டை அதிகரிப்பது உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்ச தவறிவிட்டது என்று குற்றம்...
"புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதினை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். காரணம், நாட்டின் அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றவர்களைத் தேர்தலில் தீர்மானம்மிக்க சக்தியாக மாற்ற முடியாது." - இப்படித் தெரிவித்தார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும. நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறிய விடயங்கள்...
க.பொ.த சாதாரண தர பரீட்சை முறைக்கேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற ஹொட்லைன் இலக்கம் அல்லது 0112785211 பொது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வரை...
2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிர்வாதம் பெற்றார். முதலில் பேலியகொடை வித்தியலங்கார பிரிவினாவுக்கு சென்ற ஜனாதிபதி பிரிவினாவின் அதிபர் களனி பல்கலைக்கழக வேந்தர் வண.வெலிமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரரைச்சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பிரிவினாவுக்கு வருகை தந்திருந்த பொதுமக்களும் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்....
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) மூத்த பிரஜைகள் குழுவினரின் போக்குவரத்து நலன்கருதி, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் முச்சக்கர வண்டியொன்று திங்கட்கிழமை (08) கையளிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீ.மோகனன் ஊடாக இந்த முச்சக்கர வண்டியை ஆளுநர் கையளித்தார். தங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கு வாகனம்...
வடக்கு மாகாண முதலமைச்சரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. முதலமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து யாழ்., முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. பயனாளி ஒருவருக்கு 25,000 ரூபா வீதம் 20 குடும்பங்களுக்கும் கோழி வளர்ப்பிற்கு தேவையான அனைத்துப் பொருள்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கப்பட்டன....
திஸ்ஸ அத்தநாயக்காவைப் போல, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆளும் அரசில் இணைந்து கொள்வர் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இது மிக முக்கியமானதொன்று. வீழ்ச்சியுறும் கொள்கைகளுடன் தரிசனமில்லாத, எதிர்கால நோக்குகளற்ற திடமான...
தாவடி பகுதியில் மூவர் மீது சாரமாறியாக வாள்வெட்டு இடம்பெற்றதில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த வாள்வெட்டில் தாவடி பகுதியைச் சேர்ந்த ஞானகுமார் (வயது 38) பிரதீபன் (வயது 30) கஜாகரன் (வயது 21 ) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். தாவடி உப்புமடம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை...
ஆளும் கட்சியில் இணைந்துகொண்ட திஸ்ஸ அத்தநாயக்காவிற்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (more…)
முரண்பாடுகளை வளர்த்து கொண்டிருப்பதனால் மூன்று தசாப்த காலம் எமது இனம் அழிவுகளை சந்திக்க வேண்டி நேர்ந்ததாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் தெற்கு இளைஞர் அணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
2014 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமைகள் நிகழ்வு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (16) காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். கிளையின் இணைப்பாளர் த.கனகராஜ் திங்கட்கிழமை (08) தெரிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் தினமானது இவ்வருடம் 'மனித உரிமைகள்-365' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் இலங்கை...
வடமாகாணத்தில் கடந்த 30 வருடகாலமாக பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறவில்லை என்பதுடன், பெண்கள் இரவு வேளையிலும் தைரியமாக நடமாடித்திரிந்ததாகவும் யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் நாவலர் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (08) வெளியிடப்பட்டது. இதில்...
Loading posts...
All posts loaded
No more posts
