- Saturday
- May 9th, 2026
இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த நாள் (மே 18) இன்றாகும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில்...
புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி...
தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது இளைய தளபதிக்கு ஜோடியாக புலி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. ஹன்சிகா இப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளாராம். இப்படத்தில் இளவரசியாக வரும் ஹன்சிகா, சண்டைக்காட்சிகளில் கூட நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. ’புலி படம் தனக்கு மிகவும்...
பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் இயக்குனர்களில் பிரபுதேவாவும் ஒருவர். இவர் நடிப்பில் தமிழில் படங்கள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. தங்கர் பச்சன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ’களவாடிய பொழுதுகள்’ படமும் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது. தற்போது மீண்டும் பிரபுதேவாவிற்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது. ஏற்கனவே திரு இயக்கத்தில் ஜெய்க்கு அண்ணனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு...
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே இணைந்து, முன்னாள் வீரர்களுக்கான டி20 தொடர் நடத்த உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகமெங்கும் புகழ் பெற்றுள்ளது. ஆனால், முன்னாள் வீரர்களுக்கு இதில் இடம் கிடைப்பதில்லை. அவர்களை ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமித்து கை கழுவி விடுகின்றன ஐபிஎல் நிர்வாகங்கள். இதனால்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் குறித்த நினைவு தினத்தை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அன்றையதினம் அதே பகுதியில் நினைவு தினத்தை நடத்தவுள்ளதால் இரு கட்சிகளுக்குள்ளும் முரண்பாடு ஏற்படலாம் என...
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையில் உள்ள குழந்தைவேல் சுவாமிகள் ஆலயத்தில் 17, 18, மற்றும் 19 ஆகிய திகதிகளில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சைவ மகா சபையால் வெள்ளிக்கிழமை (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த...
செம்மணி வீதியில் இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் மோட்டார்சைக்கிளும் கலோட்ரஸ்ட் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். விபத்தில் பு.துஷிதரன் (வயது-25) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
சட்டவிரோத குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆகக்கூடாது என யாழ்.பல்கலைக்கழக சமூகம் சபதம் எடுத்துள்ளது. புங்குடுதீவு மாணவியின் படுகொலை நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கண்டன போராட்டத்தின் பின்னரே யாழ்.பல்கலைக்கழக சமூகம் அவ்வாறு சபதம் எடுத்துக்கொண்டது. அத்துடன் அவ்வாறான குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆகும் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான மாபெரும்...
புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான லெனின் குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார்,ஜெயக்குமார், தவக்குமார்,ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 18...
புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த கொலையாளிகளுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கண்டன போராட்டம் யாழ்ப்பாணப்...
ஈ-சற் பணப்பரிமாற்றம் மூலம் பலரை ஏமாற்றிய ஒருவரை இளவாலைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். பண்டத்தரிப்பை சேர்ந்த இருவர் சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த சந்தேக நபருக்கு ஈ-சற் முறையில் பணத்தை அனுப்பி ஏமார்ந்தனர். அவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தை நீதிமன்றின் அனுமதியுடன் விசாரணைகளை நடத்தியே பொலிஸார்...
மே 18 ஆம் திகதி, போரில் உயிர் நீத்தோர் நினைவாக - அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக, விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், "உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப்...
"நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கூட்டு அரசுக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். "எமது பிரதான எதிரி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவரை ஒன்றிணைத்து எதிர்கால அரசியலை மேற்கொள்ள முடியாது....
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2014 - 2015 ஆம் கல்வியாண்டில் வியாபார முகாமைத்துல இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும்...
பிரதான ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ரயில் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குணுபிடிய பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டெயினர் ஒன்றுடன் யாழ் தேவி ரயில் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில்...
குடும்பப் பகையே புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்னர். புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவியின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் மூவரைப் பொலிஸார் கைதுசெய்தனர். அவர்கள் மூவரும் மாணவியின் உறவினர்கள் ஆவர். பொலிஸாரின் விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்தன என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மூவரும் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான்...
புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதேவேளை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகளும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். மாணவி படுகொலைக்கு நீதி...
பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (15) விடுதலை செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய, சட்ட மா அதிபர் திணைக்களத்தால் யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை...
Loading posts...
All posts loaded
No more posts
