யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை அஞ்சலிக்கும் உரிமையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்!

கடந்தகால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்ததும் உரிமை அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அதற்கென ஒரு பொதுவான தினத்தைப் பிரகடனப்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த கால யுத்தத்தால் உயிரிழந்த...

தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்தநாள்! வாழ்த்தி வடக்கில் சுவரொட்டிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்று 61 ஆவது பிறந்தநாள். இந்நிலையில், அவரை வாழ்த்தி வடக்கின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிரித்த முகத்துடன் பிரபாகரனின் உருவப்படம் காணப்படும் இந்தச் சுவரொட்டிகளில், 'தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்க!', 'தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தலைவர் வாழ்க!!' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தமிழீழ...
Ad Widget

யாழ் சர்வதேச வர்த்தக சந்தை ஜனவரியில்!

இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தக சந்தையான யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தை (JITF 2016) எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் தென்பகுதி முதலீட்டாளர்களை வடபகுதிக்கு அறிமுகம்...

விநாயகர் பெருங்கதை விரதம் இன்று ஆரம்பமாகிறது!

உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் இன்று (26) முதல் ஆரம்பமாகின்றது. விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும்...

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!

கொழும்பு நகரிலும் அதற்கு அண்டிய பகுதிகளிலும் போக்குவரத்து விதிமுறைகள் இன்று (26) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வகையில் உரிய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்துகின்றவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி.றுவான் குணசேகர தெரிவித்தார். இதன் பிரகாரம் ஶ்ரீஜயவர்தனபுர வீதியின்...

யாழ் மற்றும் வவுனியாவில் தடை செய்யப்பட்ட சுவரோட்டிகள்

இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்பொன்றிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதானது சட்டவிரோத செயல் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சார்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை தற்பொழுது காணக்கூடியதாக உள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளது. இதேவேளை...

மதுபான வரிகளை மீண்டும் அதிகரிக்க ஜனாதிபதி பணிப்புரை

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மூலம் இறக்குமதி மதுபானம் மீது குறைக்கப்பட்ட வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். 5%க்கு குறைவான அற்ககோல் கலந்துள்ள இறக்குமதி மதுபானத்திற்கான வரி இம்முறை வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுபான இறக்குமதியின் போது நிலவிய வரி சமத்துவமின்மையை...

நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை – அமீர்கான்

பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நேற்று முன்தினம் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நாட்டின் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என்று மனைவி கிரண் என்னிடம் கேட்டார். இது நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். அமீர்கானின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. யாரும் நாட்டை...

சகிப்பின்மைக்கு எதிரான போராட்டங்கள் கவித்துவமானவை – ஏ.ஆர்.ரஹ்மான்

நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மைக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் வன்முறையில்லாமல் கவித்துவமாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ரகுமான் அளித்துள்ள பேட்டியில் “அனைத்து எதிர்ப்புகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் வன்முறையற்றதாக இருப்பதே சிறந்தது. ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அணுகுமுறை கவித்துவமாக உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள...

அம்ரேஷை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த லாரன்ஸ்

பழம் பெரும் நடிகையான ஜெயச்சித்ராவின் மகன் அம்ரேஷ். ஜெயச்சித்ரா தன் மகனை பெரிய நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். அப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. ஆனால் இப்படம் சரியாக ஓடாததால் நடிப்பை விட்டு விடவேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். இசை மீது கொண்ட ஆர்வத்தால் அப்படத்திற்கு...

கிளிநொச்சியில் விதை சுத்திகரிப்பு நிலையம்

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான அடிக்கல்லை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (24.11.2015) நாட்டி வைத்துள்ளார். விதைப்புச் செய்யவேண்டிய விதைகளுடன் முளைதிறனற்ற விதைகள், வேறு பயிரினங்களின் விதைகள், களை விதைகள் போன்றவையும் கலந்திருப்பதால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக்...

இந்த ஆண்டில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவு எயிட்ஸ் நோயாளிகள் கண்டுபிடிப்பு!

மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது. “இன்னும் எங்களுடன் சிகிச்சை உண்டு” எனும் தொனிப்பொருளில் தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சுகாதார கல்வி பணியகத்தில் செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய...

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு சுமந்திரன் எதிர்ப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னதாக...

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 17 இலங்கையர் இணைவு

சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலியான குருநாகல், கலேவெலயைச் அபு ஷுராயா என்பரோடு, இன்னும் 16 இலங்கையர்களும் அக்குழுவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை துரிப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவர்களது சஞ்சிகையான தாபிக்கின் 12ஆவது பதிப்பிலேயே, அபு ஷுராயா தொடர்பான...

அரச காணிகளில் இருந்து 7 குடும்பங்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு!!

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் நீண்ட காலமாக உரிய அனுமதிப் பத்திரங்களின்றி அரச காணிகளில் குடியிருந்து வந்த 7 குடும்பங்களை அந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். அரசுக்குச் சொந்தமான காணிகளில் இந்தக் குடும்பங்கள் அடாத்தாகக் குடியேறியிருப்பதாகத் தெரிவித்து, அரச காணிகள் மீளப் பறித்தல் சட்டத்தின் கீழ்,...

மாவீரர்களுக்கு நாடாளுமன்றில் தமிழ்க் கூட்டமைப்பு அஞ்சலி!

தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு...

வட,வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யலாம்?

நாட்டின் வட,வடமத்திய, கிழக்கு ஊவா மாகாணங்களில் இன்று (25) ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது என அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால்...

ரொரன்டோ முருகனும் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டு!!

கனடாவின் ரொரன்டோவிலுள்ள முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்றான கந்தசாமி ஆலயம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த ஆலயம் இவ்வாறு பணம் வழங்கியமை தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்திய...

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முறைகேடுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ்

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பயனாளிகள் அதிகாரிகளின் முறைக்கேடுகளுக்கும், உதாசீனங்களுக்கும் ஆளாகிவருவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.எனவே, இவ் விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,...

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்

சிவகார்த்திகேயன் – கீர்த்திசுரேஷ் நடித்த ‘‘ரஜினி முருகன்’’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படம் தொடர்பாக இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன. எனவே, இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்....
Loading posts...

All posts loaded

No more posts