- Saturday
- June 13th, 2026
‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம்...
20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உப தலைவரா தினேஷ் சந்திமால் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தத் தொடரில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஜெப்ரி வெந்தசே ஆகியோருக்கு பதிலாக சுரங்க லக்மால் மற்றும் லகிரு திருமானே ஆகியோர் அணிக்கு...
நேற்று(7) மகாசிவராத்திரி தினமன்று நள்ளிரவு மதுபோதையில் வந்த இனந்தெரியாதவர்களால் யாழ் இந்துக்கல்லுாரி அதிபரின் உத்தியோக பூர்வ இல்லத்தின் மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது அதிபர் இல்லத்தில் இல்லை என்று அறியவருகின்றது. கல்லுாரி வீதியில் கல்லுாரிக்கு முன்பாக இருந்த அதிபர் இல்லத்தின் மீதே இந்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுப்போத்தல் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் போது கல்லுாரி பாதுகாப்பு உத்தியோகத்தர் வாள்...
சூர்யா, சமந்தா, நித்யாமேனன், நடிக்கும் படம் 24. யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இன்று நேற்று நாளை டைம் மிஷின் பற்றிய படம். அதைபோன்ற கதைதான் 24ம் என்று கூறப்பட்டது. அதனை இப்போது இயக்குனர் விக்ரம் குமார் உறுதி...
15 வயது இளம்பெண்ணை ஒருவர் கற்பழித்து அவரை தீ வைத்து எரித்து கொல்ல முயற்சி நடந்தது. உயிருக்கு போராடிய நிலையில் அவர் டில்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்நாளில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நொய்டாவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்த பெண்ணை ஒருவர் பலவந்தமாக...
யாழ்ப்பாணத்தில் பணப்பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் வெங்காயத்தின் அறுவடைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. அச்சுவேலி பத்தைமேனி விவசாயிகளின் அழைப்பின் பேரில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி. ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோர் அப்பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2016) சென்று வெங்காயச் செய்கையைப் பார்வையிட்டுள்ளனர். அங்கு அமைச்சர்...
தமிழ்மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டமுன் வரைபு தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங் களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டுவருவதும் இதில் மக்கள் மிகவும் உற்சாகத்துடன்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான நவரட்ணராஜா இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சுகவீனமுற்றிருந்தார். இந்நிலையில் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சை பெற யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை இவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற இருந்த நிலையில் அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பினால்...
வடமேல் மாகாணத்துக்குட்பட்ட குளியாபிட்டிய பிரதேசத்தில், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்ற வதந்தியால், பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்பை இழந்திருந்த 6 வயது சிறுவனை, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சிறுவனின் பாடசாலைக் கல்வி வாழ்க்கை முடிவுறும் வரையில், புலமைப் பரிசில் திட்டமொன்றை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை விவசாய அமைச்சரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதியாக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. 'நச்சுத்தன்மையற்ற நாடு' வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
இலங்கை ருவென்ரி -20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து லசித் மலிங்க விலகியுள்ளார். ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி கண்டதன் எதிரொலியாகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். எனினும் ருவென்ரி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் நேரத்தில் அவர் தனது தலைமைப் பதவியை ராஜிநாமா செய்திருப்பதால் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள்...
இவ்வருடத்தின் கடந்த இரு மாதகாலத்திற்குள் சுமார் 40 பேருக்கு எயிட்ஸ் தொற்று பரவியுள்ளது என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரசார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 25 - 49 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாகவுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரச்சார அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி - நாச வேலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில்...
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமர் சங்ககார, ரொமேஷ் கலுவிதாரண, லலித் கலுபெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கிட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் த சில்வாவின் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழ அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கு, தமிழக அரசின் மனித நேயமின்மையே காரணம் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், "’மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில்...
விடுதலைப் புலிகள் ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான, சந்தேகநபருக்கு எதிரான வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2000ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் மூலம், ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கிய குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகள்...
யாழ். தெல்லிப்பளை யூனியன் சந்திப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சாவற்காடு - ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் புவிந்தன் (வயது 21) மற்றும் அரியரட்ணம் அபிராஜ் (வயது 19) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர். கோயிலுக்கு சென்று, மீண்டும் அதிவேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்த இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கில் வீதியை...
புறாவின் இறக்கையில் கட்டி கடிதம் அனுப்பியது, குதிரை வீரன் மூலம் தூது அனுப்பியது, பின்நாளில், லாந்தர் விளக்கை ஏந்தியபடி, இரவு-பகல் பாராமல் ஓயாது ஓடிய அரசுப் பணியாளர்கள் மூலம் தகவல் பரிமாறியது, பின்னர் தந்தி மற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உட்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இமெயில்’ எனப்படும்...
வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தனது சுய விருப்பத்துடன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 9 மாதங்களுக்கு முன்பு...
திரைப்படங்களில் வரும் நம்ப முடியாத செயல்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு நிஜமாகி வருகின்றது. தற்சமயம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இதை சாத்தியப்படுத்தும் முதல் ஆய்வில் வெற்றி கண்டுள்ளனர். கலிஃபோர்னியாவை சேர்ந்த ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களை வேகமாக படிக்க செய்யும் புதிய முறையை மனித மூளையில் நேரடியாக தகவல்களை வழங்கும் சிமுலேட்டர் ஒன்றை...
Loading posts...
All posts loaded
No more posts
