- Sunday
- September 14th, 2025

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக...

யாழில் 9 ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு யூலை 1ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடைவிதிக்கும் தீர்மானம் யாழ் மாவட்ட செயலகத்தினால் அண்மையில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு யாழ் வணிகர் கழகம், மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில் இத்திட்டம் அமுலுக்கு வருமாக...

பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு குரலற்றவர்களின் குரல் அமைப்பு சென்று அவரை சந்தித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றி...

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நபர் ஒருவர், வித்தியாசமான பதாதையொன்றை வைத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பைத் தனது வீட்டின் முன்னால் பதாதையொன்றை காட்சிப்படுத்தியுள்ளார். குறித்த நபரின் வீட்டு பகுதியின் வீதியோரமாகப் பலரும் குப்பைகளை வீசி சென்றுள்ளதால் தினமும் பல...

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளின் மிரட்டல் காரணமாகவே மாஸ்கோவை கைப்பற்றும் முயற்சியிலிருந்து வாக்னர் குழு பின்வாங்கியதாக பிரித்தானிய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வாக்னர் ஆயுதக்குழு தளபதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் தமது வாக்னர் வீரர்கள் 2 ஆயிரம் பேரை கொன்றுவிட்டதாகக் கூறி...

எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் குறிப்பிட்டார். இம்மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல்...

சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி கிளிநொச்சி, பொன்நகர் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அரச அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து, தமக்கு விரும்பியவர்களுக்கு வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டிவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கிளிநொச்சி டிப்போ...

தீ காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பெண்ணை தீ வைத்து கொழுத்திய குற்றச்சாட்டில் 23 வயதான இளைஞன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார். கடந்த 13ஆம்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு வரும் போது உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல்...

வர்த்தமானி அறிவித்தலின்படி 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,500 மில்லிகிராம் எடையுள்ள பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49...

யாழ். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (25.06.2023), ஞாயிற்றுக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது....

ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழு அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியதால் ஜனாதிபதி புடின் அதிர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாஸ்கோவை விட்டு தனி விமானத்தின் மூலம் அவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. முன்னாள் ரஷ்ய அதிகாரியான டிமிட்ரி உக்டின் மற்றும் புடினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் இணைந்து 2014ம் ஆண்டு...

யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய காலப்பகுதியில் இடமாற்றத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட சமுத்தி தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,...

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலை புலிகள் உறுப்பினருக்கு ஆதரவு...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தந்திரோபாய அணுவாயுதங்களைப்(tactical nuclear) நிச்சயம் பயன்படுத்துவார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மேலும் கடந்த வாரம், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தனது நாட்டு தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்கத் தொடங்கியுள்ளதாகக் பைடன் குற்றம் சுமாட்டியுள்ளார். அவற்றில் சில 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி...

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் வியாழக்கிழமை (22) இரவு இரு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரண்டு வாள்களை எடுத்துச் சென்றபோது வீதியில் வைத்து, மானிப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேராட்டத்தில் ஈடுப்பட்ட சந்தை வர்த்தகர்கள் சார்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகள்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “விழித்திரை சத்திர சிகிச்சைகள் சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் தற்பொழுது விழித்திரை சத்திர சிகிச்சை...

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் மாணவிகளின் நலன் கருதி பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்ட வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும்,...

எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜூன் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதன்போது நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

All posts loaded
No more posts