விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு டெலிகொம் நிறுவனத்தை விற்க முயற்சி: பொன்சேகா

டெலிகொம் நிறுவனத்தை முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு விற்க ஜனாதிபதி முயற்சிப்பதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் (22.06.2023) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வது தொடர்பில் இங்கிலாந்தில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய நபருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். டெலிகொம்...

விடுதலைப் புலிகள் தலைவரின் பிரேத பரிசோதனையை மூடி மறைக்கும் அரசாங்கம் – சிவாஜிலிங்கம்

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து முழுப் பொய்களை சொல்லி வருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன...
Ad Widget

கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுக்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா!!

கிரைமியா தீபகற்பத்தையும் உக்ரைனையும் இணைக்கும் பாலமானது உக்ரைனின் தாக்குலினால் சேதமடைந்துள்ளது என ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேவேளை சோங்கார் பாலம், உக்ரைனின் தென் பிராந்திய மாகாணமான கேர்சோனையும் கிரைமியாவையும் இணைக்கிறது. கேர்சோன் பிராந்தியமும் தனக்குரியது என கடந்த வருடம் ரஷ்யா அறிவித்திருந்தது. அதன்...

அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு!!

யாழ். வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அல்லைப்பிட்டி மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளின்போது மண்டை ஓட்டுத் துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தி நீதிமன்றக் கட்டளையைப் பெற்றிருந்தனர். ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி...

கம்மன்பிலவின் விஜயத்திற்கு பாரிய எதிர்ப்பு!

திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும், பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராகவும் தண்ணி முறிப்பு காணிகளை விடுவிக்க கோரியும் , தண்ணி முறிப்பு மக்களை மீள்குடியேற்றவும் வலியுறுத்தியுமே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே குருந்தூர்...

மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகமே அரசாங்கத்தை பாதுகாக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

கபுடு கா,கா, என்று மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறது. மக்கள் போராட்டத்தால் சிறிது காலம் விலகி இருந்தவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலும் ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

கஜேந்திரகுமார் கைது விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம்!!

மருதங்கேணி விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் இரண்டு மணிநேரமாக பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு பகுதியில் உள்ள பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரால் நேற்றையதினம் (21.06.2023) வாக்குமூலம் பெறப்பட்டது. கிளிநொச்சி பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரின் அழைப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த...

கத்தியை காட்டி மிரட்டி இளம் பெண் கடத்தல்!

கிளிநொச்சி - பூநகரி, முட்கொம்பன் பகுதியில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த பெண்ணை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் அவரது கணவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிளிநாச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.47 ரூபாயாக அதிகரித்து விற்பனை விலை 314.49 ரூபாயாக பதிவாகியுள்ளது. மத்திய வங்கியினால் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் படி...

சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி!!

ஹொண்டு​ரஸ் நாட்டில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிாிழந்தனா். மத்திய அமெரிக்கா நாடான ஹொண்டு​ரஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகில் உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரண்டு குழுக்களாக...

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் பாணின் விலை 150 ரூபாய்!

யாழ்.மாவட்டத்தில் இன்று தொடக்கம் பாண் ஒரு றாத்தலின் விலை 150 ரூபாயாக இருக்கும் என யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிஒஉத்துள்ளது. தற்பொழுது பாணின் விலையை மாத்திரமே குறைத்துள்ளோம். ஏனைய பேக்கரி உற்பத்திகளின் (பணிஸ் உள்ளிட்டவை) விலையை குறைக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் மாவின் விலை குறைக்கப்படுமாயின் அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின்...

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை...

இன்று கன மழை பெய்யும் சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக வெளியான விசேட அறிவிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்திற்க் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

யாழில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்றைய தினம் அத்திவாரம் வெட்டும் போது, மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு...

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வட, கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள பேரினவாதம் தயாரித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை அறிக்கைகளை ஏற்க முடியாது. யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

உக்ரைனின் அதிநவீன இராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்த ரஷ்யா!

ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் தீவிரமடைந்த போர் நடவடிக்கையின் போது உக்ரைனில் இராணுவ குடோன்களில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அதிநவீன இராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் எம்.ஐ.8 ஹெலிகாப்டர் மற்றும் பல டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய இராணுவத்தின் செய்தி தொடர்பாளர்...

ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் முதல் நாடு!!

பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்ய அரசு மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான முடக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை சட்டம் உறுதி செய்யும், அத்தகைய நடவடிக்கையை எடுக்கும் முதல் ஐரோப்பிய அரசாங்கம் என பிரித்தானியா மாறவிருக்கிறது. இதுவரையான காலபகுதியில், சுவிட்சர்லாந்து உட்பட பல மேற்கத்திய அரசாங்கங்கள், அமெரிக்கா...

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனி முன்னெடுப்பு!

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்றை இன்று முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. யாழ்., பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, யாழ், போதனா வைத்தியசாலை வீதியூடாக சென்று மீண்டும் நூலகத்தை வந்தடைந்தது. இதன் போது தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்...
Loading posts...

All posts loaded

No more posts