- Sunday
- September 14th, 2025

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக் குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இது வரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 9 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

யாழ் மாவட்டத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள்....

05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதேநேரம், பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் செயல்படுகிறது. கடந்த வௌ்ளிக்கிழமை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக சிறப்பு வங்கி விடுமுறை வழங்கப்பட்டதுடன் கடந்த வியாழக்கிழமை முதல் வங்கிகள்...

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து வகையான சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையினை 3,000 ரூபா வரையில்...

கொக்குதொடுவாய் போன்று வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப்புதைகுழிகளை மூடிமறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்களம் தம்வசப்படுத்தியிருக்கின்றதா? என்று மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள்...

ரஷ்ய படைகளிடமிருந்து 37 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கன்னா மல்யார் இதனை தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை கொண்டு நடத்திய எதிர்தாக்குதல் மூலமாக, கடந்த வாரத்தில் 37 சதுர கிலோமீட்டர் நிலத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கயைம, மெலிடோபோல் மற்றும் பெர்டியன்ஸ்க்...

கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார் கொக்குத்தொடுவாய் மத்தியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புகளும் ஆண் பெண் போராளிகளின் சீருடைகள் சிலவும் வெளிவந்துள்ளது. இப்பகுதிக்கு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

முல்லைத்தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினைத் தோண்டிய போதே குறித்த மனித எச்சங்கள் தென்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும்...

உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியாகியுள்ளது. உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கியமையை ஒட்டிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார். இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள...

.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில்,...

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. 2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை...

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 6 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்திரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றிருந்தன எனினும்...

புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். யாழ்ப்பாணம் - புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்....

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்...

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(30.06.2023) அதிகாலை மதுரங்குளி - கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான...

வாக்னர் கூலிப்படைத்தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய இராணுவ தலைவர்களை கடத்த திட்டமிட்டிருந்ததாக இரகசிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த இரகசிய சதித்திட்டத்தை பாதுகாப்புப்படையினர் முடக்கிவிட்டார்கள் எனவும், இதனால் திட்டமிட்டிருந்த கிளர்ச்சியை முன்னெடுக்கும் நிலைக்கு யெவ்ஜெனி பிரிகோஜின் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வாக்னர் கூலிப்படையின் தலைவர் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோரை...

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்துள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும்...

அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக நலன்புரி உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள், பாரபட்சங்கள் காணப்படுவதாக குற்றம் சாட்டும் மக்கள், குறித்த பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஆட்சேபனை செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்குவதற்கும் நிதி வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்வதுடன் குறித்த நிதி...

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கார் சாரதியே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர்...

உக்ரைனின் பக்முட் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சண்டை தொடர்பான காட்சிகளை உக்ரைனின் 3வது தாக்குதல் படை வெளியிட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளையும் சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன், தற்போது...

All posts loaded
No more posts