- Wednesday
- June 17th, 2026
சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமும் இராணுவத்தினருமே ஏற்கவேண்டும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். சிவராம் கொலைசெய்யப்பட்டு நேற்றுடன் 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது கொலைக்கு நீதி வேண்டி நேற்று கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கான பந்துவீச்சுப் பயிற்றுநராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வெள்ளை மின்னல் என அழைக்கப்படுபவருமான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்காக மாத்திரமே அவரது நியமனம், இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுப் பயிற்றுநராக இருந்த கிறெய்க் மக்டேர்மர்ட், உலக இருபதுக்கு-20 தொடரைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே,...
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடல்நீரேரியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, சீனட்டியைச் சேர்ந்த சிவஞானம் சிவலோகநாதன் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 22ஆம் திகதி தொடக்கம் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....
மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், மல்லாகம் நீதிமன்றத்தில் வைத்து வியாழக்கிழமை (28) வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 2 இலட்சத்து 50...
நெடுந்தீவுக்கும் - குறிகட்டுவானுக்கும் இடையில் கடல்வழி போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் குமுதினிப் படகின் நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி காலை 7.30, மற்றும் மாலை 2.30 மணிக்கு சேவையில் ஈடுபட்ட படகின் நேரம் மாற்றப்பட்டு முறையே காலை 6.30 மணி மற்றும் மாலை...
வட மாகாணத்துக்கான நீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பவற்றை குறுகிய மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை பணித்துள்ளார். எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ள வட...
உலக தொழிலாளர் தினமான மே தினத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்துள்ளனர். அர்ப்பணிப்பதே குறிக்கோள்: ஜனாதிபதி '2015இல், நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் அவகாசத்துக்குள் காலடி வைத்துள்ள தற்போதைய சூழலில் மலர்ந்துள்ள இந்த மே...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தேசிய அமைப்பாளராக தற்போது செயற்படுகின்ற மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும, நாடாளுமன்றத்துக்குள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை வழிநடத்தும் முழுப்பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. கிருலப்பனையில் இடம்பெறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதினக்...
இலங்கையுடனான உறவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூடுதல் முக்கியத்துவம் வழங்குகின்றார் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமெரிக்க - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு பேரவை மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் உலகின் வேறு எந்த நாடும்...
"வடக்கு, கிழக்கில் தொடரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கைதுவேட்டை உடன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும் நிலைமை அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.'' இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். "கைதுகள் இனிமேலும் தொடர்ந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தயக்கமின்றி எடுப்போம். காரணமின்றி கைது செய்யப்பட்டவர்கள் உடன்...
ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல்-நினோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா -நினோ' சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத...
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் தனி மாநிலம் எனக்கூறி தமிழ் - சிங்கள மக்களிடையே மீண்டும் ஒரு பிரிவினையை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுள்ளார். அத்துடன் கடந்த கால சம்பவங்களை மறந்து சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு அனைவருடனும் இணைந்து வாழக்கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் போராளிகளுக்கு அமைச்சர் கூறியுள்ளார்....
கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே இதற்கமைவாக நாட்டிலுள்ள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்கள், தற்காப்புக் கலைஞர்கள், நடனம், தாள வாத்தியம், இசை, மஜிக், கிராமியக் கலை, கவி, திரைப்படம்...
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதேவேளை இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில்...
இராணுவம் என்ன செய்ய வேண்டுமென்பது பற்றிய கொள்கை பிரகடனம் பற்றிய தீர்மானங்கள் எடுக்கபடுமென எதிர்பார்க்கின்றேன் என வனஜிவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஆராய்வு கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து வேலைத்திட்டங்கள்...
வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாண பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண முதலமைச்சர் சேஷல ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக முதலமைச்சர் சேஷல ஜயரட்ண தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாணத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுவதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்...
இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள...
எதிர்காலத்தில் கைதுகள் நடைபெற்றால், அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுமந்திரன் இதனை தெரிவித்தார். வடக்கில்...
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் புறக்கோட்டை மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் எ.எம்.சிவராமின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரியும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த...
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நெல் வேளாண்மைக்குரிய காணி உரிமை தொடர்பாக தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் காணப்பட்ட அமைதியற்ற நிலை காரணமாகவே காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காலை 6.00...
Loading posts...
All posts loaded
No more posts
