தமிழ் மக்களின் காணிகளை காக்கத் தவறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதவி விலகவேண்டும்!

தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கத்தின் அபகரிப்பிலிருந்து தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் காணிகளில் அரசாங்கத்தைத் தலையிடவேண்டாமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி கோருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியினால் விடுக்கப்பட்ட அறிக்கையில்...

மாணவர்களுக்குத் தொல்லை தரும் ஒலிபெருக்கி பாவனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்ளுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற ஆலயங்கள் மற்றும் கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் பாடங்களை ஆயத்தம் செய்வதற்கு ஆலயங்கள்...
Ad Widget

இனப்பிரச்சினைக்கு தீர்வின்றி தேசிய நல்லிணக்கத்திற்கு இடமில்லை

போர் குற்றத்திற்கான நீதி, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பன கிடைக்கும் வரை தேசிய நல்லிணக்கத்திற்கு இடமில்லை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நியாயப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது....

இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்

இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன....

முள்ளிவாய்க்காலில் மக்கள் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது நிலஅளவீடு

முல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் நில அளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நில அளவையாளர்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு வழங்குமாறு தெரிவித்து நில அளவை மேற்கொள்ள இன்று காலை குறித்த பகுதிக்கு நில அளவையாளர்கள் சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து வட்டுவாகல் பாலத்தை அண்மித்த இரண்டு பகுதிகளிலும்...

இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு இந்திய தொடர்ந்து உதவும்

இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கும் அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் இந்திய அரசாங்கம் தொடர்ந்து உதவும் என யாழ் இந்திய உதவித் துணைத்தூதுவர் அ.நடராஜன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் உள்ள பொருளாதார ரீதியான வளர்ச்சி தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக அது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளும்...

‘ஒரு கூர்வாளின் நிழலில்’ புத்தக வருமானத்தில் மஹரகம சிறுவர்களுக்கு மருந்து

விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவியான சிவகாமி ஜெயகுமாரன் (தமிழினி) எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்ற புத்தக பிரதிகளின் விற்பனை ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தில் 3 இலட்சம் ரூபாய், மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை புத்தக வெளியீட்டு நிறுவனத்துடன் இணைந்து அவரது கணவர், வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளனர்....

நயன்தாரா திறமையான நடிகை: விக்ரம்

விக்ரம்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘இருமுகன்.’ இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். சிபுதமீன்ஸ் தயாரித்து உள்ளார். ‘இருமுகன்’ படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பேசியதாவது:- நயன்தாராவுடன் இதுவரை நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் அவர் என்னுடன் ஜோடி சேர்ந்து உள்ளார்....

என் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: கமல்

கடந்த மாதம் தனது வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த கமலின் காலில் அடிபட்டது. அதனால் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சையின்போது அவரது காலில் சில துகள்கள் சிக்கிக் கொண்டதால் சில நாட்களுக்கு முன் அவரது காலில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை...

ரஜினியின் டுவிட்டர் அக்கவுண்டை முடக்கிய மர்ம நபர்கள்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘கபாலி’ படம் வசூலில் பெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினியின் டுவிட்டர் அக்கவுண்டை மர்ம நபர்கள் முடக்கிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினி டுவிட்டரில் இணைந்தார். சேர்ந்த...

‘நீதிபதி இளஞ்செழியன் கூறியதற்கமைய முகத்திலேயே குத்தினேன்’

சுன்னாகம் பகுதியில், பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை, அப்பெண்ணின் சகோதரன், முகத்திலேயே குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு...

வட, கிழக்கிலுள்ள விகாரைகளைப் புனரமைக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அழிவடைந்த மற்றும் பகுதியளவில் சேதமடைந்த விகாரைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில், பிரதேச செயலாளர்களின்...

வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். அநுராதபுரம் - மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயில் பாதையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில்கள், மதவாச்சி ரயில் நிலையத்துக்கு...

பௌத்த நாட்டின் இராணுவம், மிருகத்துக்கேனும் விஷம் வைக்காது

இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும் ஊசி மருந்தேற்றவில்லை. இக்குற்றச்சாட்டை, இராணுவம் முற்றாக மறுக்கின்றது' என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளைத் தடுத்து...

இலங்கை ஊடாக சென்ற இந்தியர்கள் ஐஎஸ்சில் இணைந்த விவகாரம்: ஒருவர் கைது

இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு, காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 இளம் பெண்கள் உட்பட 21 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்கள் இலங்கை வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளுக்கு சென்றதாகவும், அங்கு அவர்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த...

யாழ். மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம்

யாழ். மாநகர சபையில் பணியாற்றும் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் தமது தேவைகள் மற்றும் தாம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு நீதி வழங்க கோரி இன்று புதன்கிழமை தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். யாழ்.மாநகர சபை வளாகத்தில் இன்று புதன்கிழமை காலை 7.00 மணிமுதல் தமது தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். யாழ்.மாநகர சபையில் வாகன மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட இதர...

மாணவர் கல்வி தடைப்படாமல் செயற்பட சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

16.07.2016இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்மையான நிகழ்வினையும், நிலைப்பாட்டினையும் தொடர்புசாதனங்கள் மூலம் மக்களுக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்து தகவல்களை பத்திரிகைகளிலும் சமூக வலைத் தளங்களிலும் தெரிவித்து வருகின்றனர். சிலர் தங்கள் சுய இலாபம் கருதி உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு...

பேருந்து மோதியதால் புகைப்பட ஊடகவியலாளர் மரணம்

யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் மரணமானார். புகைப்பட ஊடகவியலாளரான 68 வயதுடைய கந்தையா நவரட்ணம் என்பவரே தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து...

காணாமல்போன வேலனையை சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் சரவனை மேற்கு வேலனையை சேர்ந்த பானுசன் என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தநிலையில் உறவினர்கள் இவரை தேடியுள்ளனர். இந்தநிலையில் வீட்டிற்கு அண்மையிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலத்தின் கால் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில் இது கொலையாக இருக்கலாம்...

யாழ்.பல்கலைக்கழக மோதல் : மேலும் பல மாணவர்களின் விபரங்களைத் திரட்டுகிறது பொலிஸ்!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் பொலிஸார், மேலும் சில மாணவர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழ் மாணவர்கள் சிலருடைய பெயர்விபரங்களை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் கோரிப் பெற்றுள்ளனர். கடந்த மாதம் 16ம் திகதி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதுமுக...
Loading posts...

All posts loaded

No more posts