- Friday
- November 6th, 2026
கேரளாவிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இலங்கையினூடாக இளைஞர், யுவதிகளை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான விசாரணைகளை பொறுப்பெடுத்துள்ள மும்பைக் காவல்துறையினர் இவரைக் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவில் இருந்து 21 பேர் இலங்கையின் ஊடாக சிரியாவின் தீவிரவாதிகளுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவர்கள்...
மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட...
சீன நீரில் மூழ்கும் வீராங்கனையான ஹீ ஸி, மூன்று மீற்றர் உந்துவிசைப்பலகையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். எனினும் அவருக்கு அதை விட இன்னொரு பரிசும் கிடைத்திருந்தது. அவரது ஆறு வருட காதலரான குவான் காய், நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருந்த பதக்கம் வழங்கும் நிகழ்வில், ஒரு முழங்காலில் அமர்ந்து திருமணக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். கடந்த வாரம் ஆண்களுக்கான மூன்று...
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, ஒரு விக்கெட்டு இழப்புக்கு 22 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட இரண்டு ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. தற்போது களத்தில், திமுத் கருணாரட்ன 8...
குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 17 இலங்கையர்களை, மட்டக்களப்பு வடக்குக் கடற்பிராந்தியத்தில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை (15) கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளராக இருந்த வே.தயாநிதி என்ற தயா மாஸ்டர் நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச விரோத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு என்பதனால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி புதிய...
மென்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவு வர்ணங்களில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த விதி முறைகளை கடைபிடிக்கத் தவறும் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதற்கான கிரபிக் லயிட் ஸ்டம் லேபிள் முறையின் கீழ் மென்பான போத்தல்களில்...
அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை வௌிப்படுத்தும் முகமாக நேற்று அமெரிக்காவின் 40 பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ளனர். இவர்கள் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வலளால் - இடைக்காடு மகா வித்தியாலத்திற்கு சென்று அங்கு நடமாடும் மருத்துவ சேவையினையும் வழங்கினர். யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில்...
கொழும்பு - கோட்டையில் இருந்து கல்கிசை வரை பயணித்த ரயிலுக்கு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கல் மற்றும் போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தத் தாக்குதலால்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாத்தையா எனப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 1989ம் ஆண்டு முதல் மாத்தையா றோ உளவாளியாக கடமையாற்றியிருந்தார் என, இந்தியாவில் வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் நீனா கோபல் குறித்த நூலை எழுதியுள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். யுத்தத்திற்காக விமானங்களைக் கொள்வனவு செய்த வேளை, அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய நிதி மோசடி செய்தார் என சந்திரிக்கா நேற்றையதினம் குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து, கோட்டாபய இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக கூறியுள்ளார்.
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு இடைவிடாது பணிகளை செய்து முடித்துக் கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவருடைய நேர்மை அவருக்கு கைகொடுத்ததா? என்றால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்....
இலங்கையில் வாழும் திருநங்கை (Transgender) சமூகத்தினர் பால்நிலை அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்நிலை தொடர்பான சமூக எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிவைக்காத ஏனையவர்களும் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பால்நிலை தொடர்பான நெறிமுறைகளுக்கு இணங்கி ஒழுகாத நபர்கள் தன்னிச்சையான தடுப்பு வைப்பு, துன்புறுத்தல் என்பவற்றை எதிர்கொண்டு வருவதாகவும், தொழில், வீட்டு...
நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரா.சம்பந்தன் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை சாந்தி சிறீஸ்கந்தராசாவுக்கு...
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த இருவரதும் பதவிகள் பறிக்கப்படுவதுடன் அவர்கள் இருவரையும் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில்...
இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்ற காலை 9.00 மணியளவில் இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் இந்தியத் தேசியக் கொடியினை ஏற்றி, குடியரசுத் தலைவரின் சுதந்திர தினச் செய்தியை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனின் இன்னிசைக்...
கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த ரயில் மீதும் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் பாதுகாப்பு பிரிவு படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவத்தில மத்தியில் உள்ள ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்காக விஷேட வைத்தியர்களுடன் மூன்று பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் பீ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்படி, இவர்களை பூரண வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன்போது இரசாயன ஊசி ஏற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பிலான உண்மைத் தன்மை பற்றி மட்டுமே ஆராயப்படவுள்ளது...
சுதந்திர தினத்தை ஒட்டி இந்தியாவுக்கு சென்ற, ஜப்பானியப் பெண்ணுக்கு, இலங்கையர் ஒருவர் மயக்க மருந்தை கொடுத்து, கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. கடந்த 10ம் திகதி டெல்லிக்கு சென்ற அந்த ஜப்பானியப் பிரஜையிடம், ரயில் நிலையத்துக்கு வௌியே வைத்து, சந்தேகநபர் தன்னை சுற்றுலா வழிகாட்டி (guide) என அடையாளப்படுத்தியுள்ளார். பின்னர், தான் ஒரு இலங்கையர் எனவும்,...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை...
Loading posts...
All posts loaded
No more posts
