தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ள கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் நேற்று (23) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இவர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer Science) பட்டத்தை தனது 11வது வயதில் பூர்த்தி செய்துள்ளார். இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாருஸ்ணன் அவர்களும் கலந்துக் கொண்டார்.