Ad Widget

312 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பில் அணித்தலைவர் முஷ்பிகூர் ரஹீம் 85 ஓட்டங்களையும்,சௌம்யா சர்க்கார் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் டில்ருவான் பேரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 494 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதேவேளை போட்டி மழைக்காரணமாக நேற்றய போட்டி நிறுத்தப்பட்டிருந்தது.

இன்று காலை போட்டி ஆரம்பமாகியுள்ளது. 3 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 7 ஒட்டங்களைப்பெற்றுள்ளது.

Related Posts