நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!!

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார். இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக...

சர்வதேச எம்மி விருது மேடையில் முதல் இந்திய நடிகர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது திரைப்பயணத்தில் மற்றொரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார். நவம்பர் 23 ஆம் திகதி நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54 ஆவது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எம்மி விருது விழாவில் விருது வழங்கும்...
Ad Widget

ஓரே வீட்டில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு!!

வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06) ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் குறித்த வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு ஆண்...

ஜனநாயகம் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது – பிரகாஷ் ராஜ்

டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட முயன்றது. அப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி, சிஜேபி நடத்தவிருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் டெல்லியின் சில முக்கிய பகுதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, தடை செய்யப்பட்ட பகுதியாகவும் டெல்லி பொலிஸ்...

செம்மணி விவகாரம்: அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை!!

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கவுள்ள போராட்ட ஒழுங்கமைப்பு தொடர்பில், நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் , அதில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது....

இலங்கை அரச சேவைகளின் திறனை மதிப்பிட புதிய டிஜிட்டல் மக்கள் கருத்தறியும் முறைமை அறிமுகம்!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் பொதுச் சேவைகளை மேலும் செயல்திறன்மிக்கதாகவும் மேம்பட்டதாகவும் மாற்றுவதற்காக "ஜனரிதம்" (SL-PULSE) என்ற இலங்கையின் முதலாவது தேசிய அளவிலான குடிமக்கள் கருத்தறியும் கணக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. அமைச்சரவையின் பூரண அங்கீகாரத்துடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP)...

மாவீரர் நாள் ஏற்பாடுகள் மற்றும் காணி குத்தகை விவகாரம்: யாழ். மாநகர சபையில் கடும் வாக்குவாதம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வில் பெரும் வாக்குவாதங்களை ஏற்படுத்தின. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை மாநகர முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி, நல்லூர்...

தீவகக் கர்ப்பிணிகளுக்கு அவசர அறிவுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 331 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவக பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்கள் , யாழ். நகர் பகுதிகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம்...

உணவுகளின் தரம் தொடர்பில் முறைப்பாடளிக்க QR குறியீடு!!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உணவுகளின் தரநிலை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக QR குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்த அச்சபையின் பொதுச் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, இந்தத் திட்டம் தற்போது வெள்ளவத்தையிலிருந்து பம்பலப்பிட்டி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கொழும்பு 01 முதல் 15 வரை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு மாநகர மேயர் விராய்...

ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன்பாக தாக்குதல்!!

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் கூரிய ஆயுத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் தூதரக ஊழியர்கள் மற்றும்...

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் வகையில் புதிய இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பஸ் சேவை நேற்று (05) ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவினால் இந்தப் புதிய பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹட்டன் இ.போ.ச. டிப்போவும், காரைநகர் இ.போ.ச. டிப்போவும்...

நாடே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 438,330 பேர் கைது!!

நாடே ஒன்றாக தேசிய இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின் போது, இதுவரை 438,330 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (05) நடைபெற்ற 'நாடே ஒன்றாக' தேசிய இயக்கத்தின் ஆன்மீக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டுள்ள மொத்த சந்தேகநபர்களில் 405,268 பேர் ஐஸ்...

வங்கக் கடலில் மீண்டும் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பிரதேசம்!!

வங்கக்கடலில் எதிர்வரும் 13- ஆம் திகதி குறைந்த காற்றழுத்த பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற்து. இதற்கிடையே, அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு...

AI நிறுவனங்களின் பங்குகள் பாரிய வீழ்ச்சி!!

அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றிகள், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுமோ என்ற கவலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, பங்குச் சந்தை சரிவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பில்லியன் கணக்கான டொலர் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் வேகத்தைக் குறைப்பதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர்...

இலங்கை – இந்திய ஒருநாள் தொடருக்கான மைதானத்தில் மாற்றம்!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இச்சுற்றுப்பயணம் 3 ஒருநாள் போட்டிகளையும் 3 இருபதுக்கு - 20 போட்டிகளையும் உள்ளடக்கியுள்ளது. போட்டி அட்டவணைப்படி, இந்த முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 13 ஆம்...