ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்த முயற்சியா?

ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்த முயற்சி ​செய்யப்பட்டதா? என்பதுதொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து டெல்லியை நோக்கி ஏ.ஐ.-2030 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது, நடுவானில் 7500 என்ற எண் கொண்ட குறியீட்டை அகமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு...

துணுக்காயில் அதிகாலையில் பரபரப்பு! வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு புகுந்த 2 காட்டு யானைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட யோகபுரம் மத்தி, கிராம அலுவலர் பிரிவில் கடந்த 12 ஆம் திகதி காலை 5.55 மணியளவில் திடீரென வீட்டின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு இரண்டு காட்டு யானைகள் வீட்டுவளவிற்குள் நுழைந்த சம்பவம் பதிவாகி உள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மீண்டெழும் மக்களுக்கு அண்மைய நாட்களில் காட்டு...
Ad Widget

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (14) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், பிற்பகல் 01.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!!

சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சவூதி உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று மரண தண்டனை விதித்து பிறப்பித்த தீர்ப்பை...

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (14) காலை 9 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது. வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம்...

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய உத்தரவு!!

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு உத்தரவிட்டார். சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிவித்தலை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும்...

வடக்கு மாகாண தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு மாகாண பொதுச்சேவையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (தரம் II - வகுப்பு 2) பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய விவரங்கள்: பதவி: தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (தரம் II - வகுப்பு 2) - வடக்கு மாகாண பொதுச்சேவை சுற்றறிக்கை இலக்கம்: 30/2026 விண்ணப்ப முடிவுத்...

வடக்கு மாகாண பொதுச்சேவையின் நூலகர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு மாகாண பொதுச்சேவையின் நூலகர் தரம் III பதவிக்கான பதின்மூன்று (13) வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய விவரங்கள்: ப பதவி: நூலகர் (தரம் III) - வடக்கு மாகாண பொதுச்சேவை வெற்றிடங்களின் எண்ணிக்கை: 13 விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.10.30 பரீட்சை திகதி: 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்...

சமூக ஊடகப் போலிப் பதிவுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத பதிவுகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். இலங்கையின் கணினி குற்றங்கள் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவை ஆகியவற்றின் கீழ் இத்தகைய குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான...

படுதோல்வியடைந்த சிக்மா!!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சம்பத், ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027!!

வடக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 'வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027' அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டைச் சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண...

ஆந்திரா சென்றார் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்துக்கு உத்தியோகப்பூர்வப் விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், நேற்று பிற்பகல் கணவரம் விமான நிலையத்தை சென்றடைந்தார். அவரை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் நேரில் சென்று உற்சாகமாக வரவேற்றனர். ஆந்திர அரசின் சார்பில் பாரம்பரிய செண்டை மேளங்கள் மற்றும் தாரை...

இலங்கை அணி வெற்றி!!

ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன்...

பிபிசி வானொலி ஒலிபரப்புகளை இடைநிறுத்தியது தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் நாடு முழுவதிலும் உள்ள எஃப்.எம் வானொலி நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிபிசி (BBC) செய்தி ஒலிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. பிபிசி நிறுவனம் "தொடர்ச்சியான விதிமீறல்களில்" ஈடுபட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த விதிமீறல்கள் என்னவென்பது குறித்து அவர் மேலதிக விவரங்களை...

சவூதி செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக, அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக, சவூதி அரேபியாவிற்கு வரும் மற்றும் அங்கிருந்து திரும்பும் விமான சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்...

இலங்கையில் முதியோர் எண்ணிக்கை 3.9 மில்லியனை கடந்தது

2024ஆம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பிற்கு அமைய இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை 3,921,124 ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். இந்த முதியோர் மக்கள் தொகையில் 1,712,535...

நேபாளத்தில் வெள்ளம்: இலங்கையருக்கு எச்சரிக்கை!!

நேபாளத்தின் கோர்கா, தாடிங், நுவாகோட் மற்றும் சித்வான்மாவட்டங்கள் மற்றும் புதி கண்டகி நதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அல்லது அப்பகுதிகளுக்குப் பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. கோர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிளை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, புதி கண்டகி...

நாட்டில் இன்றும் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழை!

நாட்டை அண்மித்துள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் கீழ் வளிமண்டலக் கொந்தளிப்பு நிலை காரணமாக, நாட்டில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப்...

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் தடுத்து வைத்து விசாரணை

கனடா குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரை, நாகப்பட்டினம் கோடியக்கரையில் கியூ பிரிவு பொலிஸாரால் தடுத்து வைத்து விசாரணை செய்துவருவதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. பைபர் படகு (Fibre boat) மற்றும் படகு மோட்டார் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே அவரிடம் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக...