- Friday
- October 2nd, 2026
இணையவழி பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் இணைய மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மக்களின் அலட்சியத்தை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடக்கூடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். ”தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரத்தின் கடவுச்சொல் (PIN), இணைய வங்கி கடவுச்சொல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP)...
போட்டிப் பரீட்சையின்றி இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்களா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் அத்துடன் இன்றுவரை அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்....
வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடியாக எவ்வித அச்சுறுத்தலும் இல்லாதபோதிலும், அதனை நோக்கி வீசும் பலத்த காற்று காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது...
இலங்கை தமிழ்த்தினப் போட்டிகளில் 2025 மற்றும் 2026 ஆகிய இரு ஆண்டுகளிலும் வடக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்று தொடர்ச்சியாக சாதனை படைத்துள்ளது. 2025ஆம் ஆண்டு 44 போட்டிகளில் பங்கேற்று 18 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 6 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 31 பதக்கங்களையும், 2026ஆம் ஆண்டு 50 போட்டிகளில் பங்கேற்று 26 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம்,...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (22) நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி...
இலங்கையின் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகொம் (SLTMOBITEL) குழுமத்தில் 'Manager - Internal Audit' பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ICASL அல்லது ACCA தகுதியுடன் தணிக்கைத் துறையில் அனுபவமுள்ள தொழில்வல்லுநர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்குச் சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகளுடன் நிரந்தரப் பணி நியமனம் வழங்கப்படும். இது தொடர்பான முழுமையான...
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பான விடயங்கள் குறித்து அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என...
யாழ்ப்பாணம் அரியாலை, செம்மணி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) டிப்பர் வாகனமும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்தச் சம்பவத்தின் போது காரில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணம் - கல்லூண்டாய் குப்பை மேட்டுப் பகுதியில் அத்துமீறி கழிவுகளைக் கொட்டுவதற்காக வாகனங்கள் சென்றடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை (21) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கல்லூண்டாய் குப்பை மேடானது தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி மக்கள் சுகாதாரச் சீர்கேடுகளுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த...
பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் டிவியில் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதில் மக்களுக்கு அதிகம் தெரிந்த, தெரியாத போட்டியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர், பிரபல நடிகை ஆனந்தி வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார். கடைசி வார இறுதி நிகழ்ச்சியில்...
அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் நடித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை ‘ராக்கா’ படம் படைத்திருக்கிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘ராக்கா’. பான்-இந்தியா படமாக உருவாகி...
பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டடம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் இதனை முதலமைச்சர் விஜய் ஆரம்பித்து வைக்கிறார். இந்த திட்டம் இன்று தொடங்கப்படுவது குறித்து மாணவர்களின் பெற்றோரின் கையடக்க தொலைபேசி எண்ணுக்கு முதலமைச்சர் விஜய் பெயரில் குறுந்தகவல் நேற்று வந்தது. அதில், 'அன்பார்ந்த பெற்றோருக்கு வணக்கம்! பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்...
''சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம் வாழ வேண்டிய நிலை தொடருகின்றது" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள்...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. மூன்றாவது இடத்திற்கான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் மோதின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8...
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உதவி வழங்கியமை உள்ளிட்ட 23,270 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது. நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன்,சுஜீவ நிஷ்சங்க ஆகியோரைக் கொண்ட கொழும்பு மேல்...
உயர் கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் இலங்கையிலேயே மிக அதிகளவில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்தப் பெறுமதி 43 சதவீதமாகும். 13 வருட பாடசாலைக் காலத்தையும், அதனைத் தொடர்ந்த உயர்கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்யும் நாட்டின் கற்றறிந்த, புத்திஜீவி மாணவர்...
பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 2 ஆவது இடம்பிடித்துள்ளது. நடிகரும், ரேசருமான அஜித் குமார் உலகளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அஜித் குமார் ரேசிங் அணி மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ரெட்ஆண்ட் ரேசிங் அணிகளின் கூட்டணியில், அஜித் குமாரின்...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் எனும் இலங்கையரின் பெற்றோர்கள் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர். இச்சந்திப்பில் சிவராசா அனோஜனின் தந்தையான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரரான சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடனான கலந்துரையாடலின் போது,...
சீரற்ற காலநிலை நிலவி வருவதன் காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள 13 தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா வலயத்திலுள்ள 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் வலயத்திலுள்ள 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போதுள்ள...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 5-வது ஆண்டாக நீடிக்கிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகப் பொது உள்கட்டமைப்புகள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள், கிடங்குகள் உள்ளிட்டவற்றைக்...
Loading posts...
All posts loaded
No more posts
