தலைமன்னாரில் ராமர் பாலம் மணல் திட்டுகளுக்கு சுற்றுலாப் படகுச் சேவை!!

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை மக்கள் மற்றும் சுற்றுலாவிகள் நேரில் சென்று பார்வையிடும் வகையில் சுற்றுலா படகுச் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரீட்சார்த்தப் படகுப் பயணம் இன்று (25.09.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன், எதிர்வரும் 28.09.2026 திங்கட்கிழமை முதல் சுற்றுலாவிகளுக்கான படகுச்...

நம்பர் முதல் TIN இலக்கம் கட்டாயம் – வௌியானது புதிய அறிவிப்பு

2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கு ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதியைப் பெறும் போது, மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும்...
Ad Widget

நாவல் பழம் விற்ற 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பரந்தன் - பூநகரி பிரதான வீதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், கிளிநொச்சி உருத்திரபுரம் - எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நிரோசன் லக்ஷன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்தவராவார். நாவற்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அச்சிறுவன்...

அனோஜனின் விடுதலை முயற்சியைக் குழப்பும் நோக்குடன் சில தீயசக்திகள் செயலாற்றுகின்றன!!

சிவராசா அனோஜனின் விடுதலையைக் கருத்திற்கொண்டு இன, மதபேதமின்றி சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளை வேண்டுமென்றே குழப்பும் வகையிலும், இந்த முயற்சி தோல்வியடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் சில தீய சக்திகள் செயற்படுவதனைக் காணமுடிகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதும், அனோஜனின் நலனுக்குப் புறம்பானதுமாகும். அனோஜனை மன்னிக்குமாறு கோருவதைத் தவிர இதுகுறித்து வேறு கருத்துக்கள் எதனையும் பொதுவெளியில் பகிர்வது உசிதமல்ல...

கவிழ்ந்த இந்தோனேஷிய மீன்பிடிப் படகிலிருந்து 25 பேரை கரைக்கு கொண்டு வந்தது கடற்படை

இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேஷிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேசியப் பிரஜைகள் MV MOONSTONE கப்பலினால் மீட்கப்பட்டுள்ளனர். KM ‘GARUDA JAYA VI’ என்ற இந்தோனேஷிய மீன்பிடிப் படகு, கடந்த 22ஆம் திகதி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால் அதில் இருந்த இந்தோனேஷியப் பிரஜைகள்...

சபரிமலையில் தங்க கிரீடம் மாயம்!

சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மேலும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறினால் காணிக்கை...

இலங்கை – இந்திய மீனவ பேச்சு மறுஅறிவித்தல் வரை பிற்போடல்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையானது இன்று (25) இந்தியாவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது, அவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட...

2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை மட்டுமே...

மதுராந்தகத்தில் தமிழக முதலமைச்சர் இன்று பரப்புரை!

இந்தியாவின் தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில், த.வெ.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் மதுராந்தகம் தொகுதியில் இன்று (25) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் த.வெ.க. தேர்தல்...

முல்லைத்தீவில் வெப்பநிலை 35.7 பாகை செல்சியஸ்

வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடற்கரைகள் வழியாக இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் இன்று (25) காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இலங்கையின் வானிலை நிலவரங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தாக்கம் இன்றில் இருந்து படிப்படியாகக் குறையும் என...

ஈரானுடன் உடன்பாட்டுக்கு வரும் அமெரிக்கா

தெஹ்ரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும், வொஷிங்டன் ஈரான் மீதான தனது பொருளாதார தடையை நீக்குவதையும் உள்ளடக்கிய, போரில் இருந்து படிப்படியாக வெளியேறும் ஒரு வழியை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் ஆராய்ந்து வருவதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக நீடித்துவரும் அமெரிக்க - ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்...

சிஎஸ்கே அணிக்கு மீண்டும் சூதாட்ட சர்ச்சை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாகவும், மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும் தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் சொல்லப்பட்டதை தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. பிரபல புலனாய்வு ஊடகமான தெஹல்கா வெளியிட்ட ரகசிய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில், சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் மூலம்...