- Thursday
- August 20th, 2026
கிளிநொச்சியின் பளையில் விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறி அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்திய நபர் குறித்த மேலதிக விவரங்களை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வெளியிட்டார். அக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் விசாரணைகளில் கிடைக்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். இது தொடர்பில் இன்று...
கைது செய்யப்பட்ட தனியார் வர்த்தக வங்கியின் முகாமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை பரிமாற்றம் செய்தமை தொடர்பில் அண்மையில் நான்கு தனியார் வர்த்தக வங்கி முகாமையாளர்களும் கைது...
விற்பனை, களஞ்சியப்படுத்தல், விநியோகம் அல்லது காட்சிப்படுத்தல் ஆகியவற்றிற்காக தங்களிடம் வைத்திருக்கும் பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்தும் பற்றுச்சீட்டு, விலைப்பட்டியல் (Invoice) அல்லது பிற தொடர்புடைய ஆவணங்களை வர்த்தகர்கள் கட்டாயமாகப் பேண வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நினைவூட்டியுள்ளது. CAA வெளியிட்டுள்ள 83ஆம் இலக்க பணிப்புரையின் கீழ், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், பொருட்களை வழங்குவோர்...
இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையின் முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 25 கிலோ மீற்றர் வரையான தூரங்களுக்கு பயணிகள் ட்ரோன்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களை இணைக்கும் இரண்டு சாத்தியமான...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றையதினத்துடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான நேற்றைய தினம் 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான நேற்றைய தினம் இறுதிநாள் அகழ்வு...
எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார். நேற்று (19)...
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவற்றாபகுதியில் வாடகை வீட்டில் கொல்லத்தை சேர்ந்த 65 வயது முதியவர் வசித்து வந்தார். அங்கு மனைவி, மகள் மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது பேத்தியும் தங்கியிருந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் மற்றும் அவரது 13 வயது பேத்தி மட்டும் வீட்டில் இருந்தனர். முதியவரின்...
கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான இனவாதி என்றும், முதலில் கருணாவுடன் இருந்ததுடன் பின்னர் ரணிலுடன் இருந்தவர் என்றும் குற்றம்சாட்டிய சுயேச்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன், தான் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காகக் குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகளை அபிவிருத்தி...
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியாகி வரவேற்பை பெற்றப் படம் ஜெயிலர். ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. இப்படத்தையும் இயக்குநர் நெல்சனே இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படம் ஒக்டோபர் 15ம் திகதி வெளியாக உள்ளது. இந்நிலையில்...
அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (19) நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில்...
கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் நேற்றையதினம் (19)வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகளவில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, காணாமல்...
பளை பகுதியில் தமீழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த விடயங்களை பொலிஸார் அறிக்கை ஒன்றின் ஊடாக வௌிப்படுத்தியுள்ளனர். அதன்படி, குறித்த காணொளிக்கு அமைய, அந்த இடமானது கிளிநொச்சி பொலிஸ்...
ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் நேற்று( 19) தெரிவித்தார். உடனடியான இராஜதந்திர அல்லது இராணுவ தீர்வுகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாத...
இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நாடு பூராகவும் உள்ள 48 மதிப்பீட்டு நிலையங்களில் இன்று ஆரம்பமாகின்றன. இப்பணிகள் 380 மதிப்பீட்டுச் சபைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இவற்றில், சிங்கள மொழிமூல பரீட்சையின் முதலாவது மற்றும் இரண்டாவது விடைத்தாள்களை மதிப்பீடு...
பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டு சந்தியில் காணப்படும் வெள்ளநீர் வடிகால் சுகாதார சீர்கேடான நிலையில் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமையிலான சபை அணியினர் குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டனர். மிகக் கடுமையான வெப்பமான காலநிலை நிலவிய நிலையில், குறித்த பகுதியில் அமைந்திருந்த ஏனைய வடிகால்கள் நீரின்றி காணப்பட்ட...
இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரியை தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (19) இரவு கூடிய தமது...
