ஹிட் பாடலுக்கு தனது மகனுடன் நடனம் ஆடிய பிரபு தேவா!!

உலக சினிமா மக்கள் கொண்டாடும் ஒரு நடன கலைஞர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன். அதேபோல் இந்திய சினிமா ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனாக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் பிரபு தேவா. நடனம், நடிப்பு, இயக்கம் என ஒரு ரவுண்டு வருகிறார். அவ்வப்போது மற்ற மொழிகளிலும் பாடல்களுக்கு நடன அமைப்பு செய்து வருகிறார், அந்த பாடல்களும் ஹிட்டாகிவிடுகின்றன....

நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதாக வரையறுக்கப்பட்டுள்ள முறையே 63 மற்றும் 65 வயது எல்லையை, அரசியலமைப்புத்...
Ad Widget

கனடாவில் அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் 10...

இரு இளைஞர்கள் உட்பட 6 பேரை பலிகொண்ட கோர விபத்துகள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற வாகன விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை திருக்கோவில் - பொத்துவில் வீதியின் விநயாகபுரம் 01 பகுதியில், பொத்துவில் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின்...

ஈரானுடன் பேச்சுவார்த்தை!! – டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் மிகவும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சாதகமான வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்காவுடன் தாங்கள் எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் (27) ஈரானுக்கும்...

இலங்கைக்கு 4ஆவது இடம்!

இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிக்கையின் பிரகாரம், மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம்...

கடந்த ஆட்சிகளில் EPF, ETF நிதியில் 3,000 கோடி மோசடி!

கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகியவற்றில் சுமார் 3,000 கோடி ரூபா வரையிலான பெருந்தொகை நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலைக்கு அருகில் தீ!! நடவடிக்கை எடுக்காத பிரதேச சபை!!

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் , தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டுள்ளது. கடற்படையினர், பெற்றோலியத்தினர் ஆகியோரின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் அந்த காணிகளுக்குள் குப்பைகளும்...

அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறவேண்டும்!!

அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 'சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை' எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வார (27 ஜூலை...

நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!

இந்தியாவில் மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை வைத்தியர்கள் அகற்றி, அவரை காப்பாற்றினர். மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10). அந்த சிறுமி தனது 3 வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பிளாஸ்டிக் பேனா மூடியை விழுங்கியுள்ளார். அதன் பிறகு சிறுமிக்கு தொடர் இருமல், காய்ச்சல்...

கிளிநொச்சியில் காட்டினை அழித்து காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்த முயன்ற நபர் கைது

கிளிநொச்சியில் காட்டினை அழித்து சுமார் 29 ஏக்கர் காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்த முயன்ற தனியார் ஒருவரின் செயற்பாடு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக தொடரும் நிலையில் குறித்த நபருக்கு எதிராக 06 வழக்குகள் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் தொடரப்பட்டு, அந்த வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து காடழிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில்...

ஆரம்பமானது தேசிய நேர்மை வாரம்!!

“நேர்மையான கலாசாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள *தேசிய நேர்மை வாரம் இன்று (27) முதல் ஜூலை 31 வரை* முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன....

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!!

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை. இந்தத்...

தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள்

சமீபத்தில் 72 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் ராயன் படத்திற்கு அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய விவாதத்திற்கும், சர்ச்சைக்கும் வழிவகுத்தது. காரணம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட ‘மகாராஜா’, ‘வாழை’, ‘மெய்யழகன்’ போன்ற தகுதியான படங்கள் இருக்கும் போது, சராசரி விமர்சனங்களைப் பெற்ற...

பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது!!

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை,...

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஏற்படுத்திய மாற்றம்!!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இதுவரை 1,200 கி.மீ. தூரம் பயணித்திருப்பதாகவும், இதன் மூலம் 3,200 லிட்டர் டீசல் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை கடந்த 17-ந் திகதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையேயான வழித்தடத்தில் இந்த பயணிகள் ரயில் சேவை...

இலங்கை பொலிஸ் துணைச் சேவையில் வேலைவாய்ப்பு!!

10.07.2026 திகதியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி 2497இன் கீழ் ஒரு அறிவிப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் 14.08.2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேற்கண்ட வர்த்தமானி அறிவிப்பில், பொலிஸ் உதவி ஆய்வாளர் பதவிக்கு 177 நபர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிக்கு 206 நபர்களும் பின்வரும் பதவிப் பெயர்களின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்....

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! 61 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. அதேநேரம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 17,395 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....

ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!!

இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான வழிகாட்டுதல்களில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2026 ஜூலை 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் இலங்கை உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற புதிய தகுதித் தேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 2021 நவம்பர் 24 ஆம் திகதி...

கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

டிட்வா சூறாவளியால் ரயில் பாதைகள் பல இடங்களில் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. பாதை புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அண்மையில் வெற்றிகரமான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பயணிகள் சேவையை மீள ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி,...
Loading posts...

All posts loaded

No more posts