இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான வழிகாட்டுதல்களில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2026 ஜூலை 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் இலங்கை உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற புதிய தகுதித் தேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2021 நவம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2255/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் இடம்பெற்றிருந்த வழிகாட்டல் இலக்கம் 04 நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருத்தம், இலங்கை அரசியலமைப்பின் 33(உ) ஆம் உறுப்புரையின் கீழ் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்க வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.