இலங்கை தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் (University of Vocational Technology – UoVT) காலியாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களுக்கு தகுதியான இலங்கை குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ரத்மலானையில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் உணவுத் தொழில்நுட்பத் துறையில் (Department of Agriculture & Food Technology) விரிவுரையாளர் பதவிகளுடன், பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.
காலியாக உள்ள பணியிடங்களின் விவரம்:
1. கல்விசார் பதவிகள் (Academic Positions):
-
சிரேஷ்ட விரிவுரையாளர் – தரம் I (Senior Lecturer – Grade I)
-
சிரேஷ்ட விரிவுரையாளர் – தரம் II (Senior Lecturer – Grade II)
-
விரிவுரையாளர் – தற்காலிகமற்றவர் (Lecturer – Unconfirmed)
-
விரிவுரையாளர் – தகுதிகாண் பருவம் (Lecturer – Probationary) (உணவுப் தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல் தொழில்நுட்பம், உணவுப் பொறியியல், உணவுப் பாதுகாப்பு, உணவுப் பௌதிகவியல், உணவு இரசாயனவியல் ஆகிய பாடப்பரப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்).
2. கல்விசாரா பதவிகள் (Non-Academic Positions):
-
உதவி நூலகர் (Assistant Librarian)
-
நிகழ்ச்சி அதிகாரி (Program Officer)
-
நிர்வாக உதவியாளர் (Management Assistant)
-
ஒளிப்பதிவாளர் (Cameraman)
-
ஓட்டுநர் (Driver)