- Monday
- June 22nd, 2026
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக,...
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார். [caption id="attachment_127007" align="aligncenter" width="612"] shot from a handgun with fire and smoke[/caption] இன்று (22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த இராணுவ...
AI இன் உதவியுடன் தலை ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவி சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சகோதரிகள் கடந்த 2023ஆம் ஆண்டு நைஜீரியாவில் பிறந்துள்ளனர். தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களை பிறப்பில் சத்திரகிச்சைக்கு உட்படுத்துவதில் மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையில் மூளை திசுக்கள் மாத்திரமன்றி இரத்த குழாய்களும் இவர்களுக்கு ஒட்டியதாக காணப்பட்டுள்ளன. இந்நிலையில் 20...
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 28 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர்...
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த...
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் பங்கேற்புடன்,...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றும் (21) ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றது. அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளில், 405 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றில்...
டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்ச டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணந்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பியகம ஆகிய...
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்துக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தனது இறுதித் தீர்மானத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளதால்,...
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டில் சுற்றுலாத்துறை வருவாய் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை ஈட்டப்பட்ட சுற்றுலா வருவாய் 1,360 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது....
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று (22) கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடலாம் போன்ற பல சிறப்பு அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன....
தமிழில் "பீட்சா, ஜிகர் தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது சில புதுமுகங்களை வைத்து குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்பராஜ் அடுத்து ஒரு ஆக்சன் படத்தை தான் உருவாக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார் மற்றும்...
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடருகின்றது. இந்த பேச்சுவார்த்தையானது இரவு முழுவதும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 60 நாட்களுக்குள் ஒப்பந்தத்தை எட்டுவது என்று கடந்த வாரம் எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, அமெரிக்கா- ஈரான் இடையேயான இந்த பேச்சுவார்த்தை கடந்த...
2026 பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் உருகுவே மற்றும் கபோ வெர்டே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, 2 - 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றுள்ளது. இருமுறை உலக சேம்பியனான உருகுவே அணியில் பல அனுபவமிக்க வீரர்கள் இருந்த போதிலும், முதன்முறையாக உலக...
ஹோர்முஸ் நீரிணையை அனைத்து கடல் போக்குவரத்திற்கும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், தெஹ்ரான் ஆட்சிக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறியதற்குப் பதிலடியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. குறிப்பாக லெபனான் பிராந்தியத்தில், போர்நிறுத்த...
இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்...
நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர் பற்றாக்குறை நிலவுவதால், தாதியர் ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கும் பணிச்சுமைக்கும் உள்ளாகியிருப்பதாக ஐக்கிய தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. [caption id="attachment_126961" align="aligncenter" width="670"] Nurses take part in a ceremony to mark International Nurses Day in Colombo on May...
