- Thursday
- June 18th, 2026
செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள், நிபுணத்துவம் வாய்ந்த பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு அல்லது பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறி ஒரு வருடமாகின்ற போதும் அவை இன்னமும் அனுப்பப்படவில்லை. அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின்...
இந்தியாவின் தமிழ்நாடு முழுவதும் மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. 21,527 அரசு பேருந்து மூலம் நாளொன்றுக்கு 2 கோடி பயணிகள் பயணம் செய்வது பற்றியும் அதில் 64...
அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது காதலன் சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலைக்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதிப்டுத்தியுள்ளார். ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து...
பிஃபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள ஜெர்மனி நாட்டு வீரர்கள், தற்போது ஆட்ட உத்திகள் மற்றும் எதிரணிகள் குறித்து மட்டுமன்றி, மற்றொரு விசித்திரமான பிரச்சினைக்கும் முகம் கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தின் வின்ஸ்டன்-சேலம் (Winston-Salem) பகுதியில் அமைந்துள்ள தங்களது பயிற்சி முகாமிற்கு அருகில் பாம்பு ஒன்று கண்டறியப்பட்டதை அடுத்தே...
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் காங்கேசன்துறையில் இருந்து புதன் கிழமை நாகைபட்டினம் பயணிக்கவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில்...
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில், போர்த்துகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். காங்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் கண்டதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக வயதில் (41 ஆண்டுகள் மற்றும் 132 நாட்கள்) தொடக்க வீரராகக் (Outfield player) களம் இறங்கிய வீரர்...
'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் மற்றும் 'NEEK' பட புகழ் ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில்...
மனித மனதிற்குள் புதைந்து கிடக்கும் ஆழமான ஏக்கங்களையும், வெளிப்படுத்தாத ஆசைகளையும் மையமாக வைத்து ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் வர்ஷா வாசுதேவ். பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் ஜூன் 19 ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமாஸ் விநியோகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது. புனித...
இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது. இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட புதைகுழியாக காணப்பட்டது. இந்நிலையில் செம்மணியில் புதன் கிழமையுடன் 380 மனித என்பு...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று (17) கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய சந்தேக நபர் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீர பிணைகளில் விடுவித்த நீதிமன்றம் வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்துள்ளது.
