பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து , அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கறுப்பு கொடியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர்...

Heat Stroke-லிருந்து தப்புவது எப்படி?

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தர். வெப்பமான இடங்களில் நிற்றல், அதிக உடற்பயிற்சி, காற்றோட்டமின்மை போன்ற காரணிகளால் Heat stroke ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு அதிக நீர் அருந்த்துதல், உடற்பயிற்சியினை தவிர்த்தல், மெல்லிய பருத்தி ஆடைகளை...
Ad Widget

இன்று முதல் ஒற்றை, இரட்டை எண்களுக்கு அமைய எரிபொருள் விநியோகம்!!

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய...

யாழில் மாணவிகளை சமூக ஊடகங்களில் அவதூறு செய்த மாணவருக்கு நேர்ந்த கதி!

சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரை 14 நாட்கள் சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின்...

விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து இன்றையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டமையை...

யாழில் வீதி விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி...

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை!!

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சவால்களுக்கு மத்தியில்...

எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,...

QR குறியீடு முறையில் எரிபொருள் விநியோகம் : பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கியூ.ஆர் குறியீடு முறையிலான எரிபொருள் விநியோக முறையை பொதுமக்கள் பயன்படுத்தும் போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எவ். யூ வூட்லர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கியூ.ஆர் குறியீடு முறையைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள்,...

அல்லைப்பிட்டியில் துப்பாக்கி சூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்றம்!

அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற...

இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அதனை வழங்குங்கள்!!

இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்....

யாழில் கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உட்பட 5 பேர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர் வாடகைக் கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களின் காருக்கு எதிரே...

யாழில் மாமியை வெட்டிப் படுகொலை செய்த அரச உத்தியோகத்தர் கைது!

வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து, மனைவியை தாக்கியுள்ளார். அவ்வேளை மனைவியை கத்தியால் குத்த முற்பட்டபோது, மனைவி,...

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக FCID யில் முறைப்பாடு!

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “Eco-Tuarism” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது....

தென்மராட்சியில் வன்முறை கும்பல் வெறியாட்டம் – 5 வீடுகள், 6 வாகனங்கள் தீக்கிரை – ஒருவர் மீது வாள் வெட்டு!!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இரண்டு கார்கள் , பட்டா...

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றபட்ட விவகாரம் – துணைவேந்தரிடம் விசாரணை!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக...

இரத்த வங்கி ஆபத்தான நிலையில்!! இரத்த தானம் செய்ய கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி...

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று, ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, பொலிஸார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்டோர கேஸ் நிறுவனமும் நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 3,990 ரூபா. 05 கிலோ சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,602 ரூபா....

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு – அரசாங்கம்

உலக சந்தையில் மசகு எண்ணெயை விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மக்களின் நலன் கருதி மிகக் குறைந்த அளவிலேயே விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 36 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள பின்னணியில், இலங்கையிலும்...
Loading posts...

All posts loaded

No more posts