- Sunday
- November 16th, 2025
முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பலொன்று மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (13) அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த கும்பல், வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளது. அதன் பின்னர், அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும், இறப்புக்கான காரணத்தை தெரிவித்தாலே சடலத்தை பொறுப்பேற்போம் என பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது....
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னர் தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். நேற்று (09) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாகாண தேர்தல்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் விஜித ஹேரத்...
பெளத்தமத பீடத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒரு நாளிலேயே இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்த கலாநிதி ஆறுதிருமுருகன் நாட்டில் உள்ள அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்பதன் மூலம்தான் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...
அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் நேற்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று (09) குப்பைகளை குறித்த...
யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணையா விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபியை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர்.
2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்கூறிய திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பரீட்சைக்கான ஒன்லைன் விண்ணப்ப முறை முடக்கப்படும். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்த சூழ்நிலையிலும்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறிப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தவகையில் மானிப்பாய் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்ட பின்னர்...
செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளான நேற்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற...
எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் வெளியிட்டுள்ளார். வர்த்தமானியின்படி, வியாபாரி எவரும் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, அடர்த்தி குறைந்த பாலிஎதிலின் (Low-Density Polyethylene), அடர்த்தி குறைந்த...
அரியாலை, சிந்துப்பாத்தி - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ் வழ்க்கை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 95 ஆக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை ரூ. 335. 92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. லங்கா ஆட்டோ டீசலின் விலையும் ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய...
