Ad Widget

வடக்கின் வீடற்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும்...

வவுனியா ஓமந்தையில் பாரிய விபத்து – வைத்திய கலாநிதி அகிலேந்திரன் மரணம்!

வவுனியா ஓமந்தையில் நேற்று மாலை (27.03.24) இடம்பெற்ற பாரிய விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் டிப்பர் வாகனமும், கப் ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின்...
Ad Widget

கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை!!

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தரவுகள் பெறப்படுவதாக அதன்...

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் சார்பில் போர் செய்யும் இலங்கையர்கள்!!

உக்ரேனில் நடந்து வரும் மோதல்களில் இலங்கையர்களும் பங்கேற்றுள்ள சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரேனில் ரஷ்யாவுக்காக போரிட்ட குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரஷ்யப் படைகளுடன்...

ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணிக்கு மக்கள் எதிர்ப்பு!

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் நேற்றையதின்ம (26) காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர். பின்னர் நீண்ட நேர காணி...

முகநூல் விளம்பரத்தை நம்பி சிகிச்சை பெற சென்றவருக்கு நேர்ந்த கதி!!

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் முகநூல் விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் வைத்தியர் எனக் கூறப்படுவரால் நடத்தப்படும் சிகிச்சை நிலையத்தில் தனது...

தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாதவர்கள் குறித்து அறிவிக்கவும்!

தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதான தேவாலயங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு...

ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை வெளியிட்ட ரணில்!!

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நியமிக்கப்பட்ட தனது அரசியல் அமைச்சரவைக்கும் ஜனாதிபதி...

வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் இனி வானூர்தி நிலையத்தில் பெறலாம்!

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் வானூர்தி நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். அதன்படி ஒரு மாதத்துக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு...

யாழ் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் : ஒருவரது நிலை கவலைக்கிடம்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மீனவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம்...

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் விடுதலையான பூசகர் சுகவீனமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை...

யாழ். இளைஞனிடம் பண மோசடி செய்த பெண் கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி , இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்ச ரூபாய் பணத்தினை...

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 31 மீனவர்கள் கடற்படையினால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31 பேர் நேற்று புதன்கிழமை (20) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு...

வட்டுக்கோட்டை கொலைச் சம்பவம் – 5 ஆவது சந்தேகநபர் அடையாளம்!

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு...

வெப்பநிலை உயர்வு : தென்னையில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு!

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகரித்து வரும் வெப்ப நிலையினால்...

நாணயத் தாள்களை சேதப்படுத்தினால் சிறை!

இலங்கையின் நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அவ்வாறு நாணயத் தாள்களை சேதப்படுத்துவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகையான பணமும் அபராதமாக விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக மீனவர்கள் போராட்டம் !

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து, யாழ். மீனவர்கள், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக இன்று(20) காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்று (19) காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு...

காங்கேசன்துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவினால் 61.5 மில்லியன் டொலர் நிதி உதவி

இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!!

வட மாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கடும் வெப்பநிலையால் யாழ். மாவட்டத்தில் தரைக்கீழ் நீரின் அளவு சடுதியாக குறைவடைந்து செல்வதால் மக்கள் நீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்...

சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!!

2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி 2023(2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts