Ad Widget

யாழ். கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள் வெட்டு

கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு (18) இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. முகமூடி அணிந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் வெற்று பியர் போத்தல்கள் மற்றும் கட்டையால் தாக்குதல் நடாத்தியதோடு வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல்...

டக்ளஸிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள வழக்கு தொடுநர் தரப்பு, சம்மந்தப்பட்ட சட்டங்களை...
Ad Widget

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ். பல்கலைகழகத்தில் போராட்டம்!!

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி அடுத்த மாதம் பெப்ரவரி 17ஆம்...

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைப்பு!

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான சமை அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.மாநகர சபையில் சபையை கூட்டுவதற்கான கோரமின்மையால் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது. மாநகர முதல்வர் தெரிவையோட்டி...

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய, பெரிய வெங்காயம் 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக...

வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி வழங்கி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், சட்டதரணி சுகாஸ் ,சட்டத்தரணி மணிவண்ணன்,சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி...

போரில் வெல்வது உறுதி- புடின் பகிரங்க அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யா வெல்வது உறுதி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த நிலையில், . உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் ரஷ்யா தனது...