Ad Widget

போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை!!

5 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தில் இது தொடர்பில் தேவையான...

எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக வெளியான செய்தி குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்

எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய...
Ad Widget

போதைப் பொருள் பாவனை: மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் – கல்வி அமைச்சர்

போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை...

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர் சிறைச்சாலையில் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019, 2020 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் விடுதலை புலிகள் மீளுருவாக்கம் என்ற...

15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும்!!

நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாயாக அதிகரித்தால், 450...

உறுப்பு நாடுகளின் வழிகாட்டலுடன் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர கூட்டமைப்பு திட்டம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஐ.நா.உறுப்பு நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. எவ்வாறாயினும், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துகொள்வதற்கு கட்சி பிரதிநிதிகளை அனுப்புவதற்கு கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை என அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இருப்பினும்...

செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!

யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. அதன் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996 ஆம் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி...

முதலாம் தவணை இன்றுடன் நிறைவு – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

022 ஆம் ஆண்டுக்கான பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலையின் முதல் தவணை இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாம் தவணை செப்டம்பர் 13ஆம்...

இந்தியாவிலிருந்து நாடு திரும்புபவர்களுக்கு அரச காணி வழங்க நடவடிக்கை: வடக்கு ஆளுநர்

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் வடமாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரச காணி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிபுப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் நாட்டில் சுமார் 58 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களில் சுமார் 3ஆயிரம் பேர் மீள இலங்கைக்கு திரும்பவுள்ளனர். ஏற்கனவே ஒரு...

இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!!

ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி​யை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை...

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை – அதிர்ச்சியில் நாட்டு மக்கள்

இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம்...