- Sunday
- July 6th, 2025

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றினால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று (07) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கடந்த வாரம் எரிபொருள் வழங்கப்பட்டதை போன்று எரிபொருள்...

ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ்...

ஜனாதிபதி அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக...

ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இருப்பினும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வேண்டும் என பேசும் போராட்டக்காரர்களை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். போராட்டத்தினால் நல்லவை மட்டுமல்ல தீமையும் நடந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லதை மட்டும் வைத்துவிட்டு, கெட்டதைப் புறக்கணிப்போம் என்றும்...

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா...

சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பதற்கான இலங்கை சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்வதற்கும் அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த ஜூன்...

ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் இயக்குனரான அலெக்சாண்டர் ஷிப்லியுக், ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொடர்பான இரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் என்ற இடத்தில் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்கு ஒலியை மிஞ்சும் வேகம் கொண்ட ஹைபர்சானிக் விமான தயாரிப்பு ஆராய்ச்சி நடந்து...

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர். இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள்...

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது இன்றைய தினம் ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி...

லங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என்றும்...

மின்வெட்டு காலப் பகுதி 1 மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அதன் அடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகளுக்கு இரவு வேளையில்இன்றைய தினம்...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. புறக்கோட்டை வர்த்தக சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய 600 ரூபாயாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாயாகவும், 330 ரூபாயாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாயாகவும், ரூ.215 ஆக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த...

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டையை வேறு யாரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட QR...

கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் உள்ள கூடாரங்களை அகற்றுவதில் போராட்டக்காரர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடலில் கூடாரங்கள், கொட்டகைகள் அமைத்திருப்பதன் மூலம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவற்றை அகற்றிக் கொள்ளுமாறும் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர். இன்று மாலை ஐந்து மணி வரை அதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிடையே...

உக்ரைனை அடுத்து நேட்டோ நாடுகளை சீண்டினால், உண்மையில் ஒட்டுமொத்த கூட்டணியும் எதிர்வினையாற்றும் என நேட்டோ தலைவர் ரஷ்ய ஜனாதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்,...

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(4) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு...

தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். தனியார் பேருந்துகளுக்கு 40 லீற்றர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர தொடருந்து சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் சேவை ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீள கொழும்புக்கு ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முன்னர் இரவு தபால் சாதாரண தொடருந்து சேவையாக நடத்தப்பட்ட...

All posts loaded
No more posts