Ad Widget

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....

பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட பின்னரே தேர்தல்!- பிரதமர்

தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று விசேட அறிக்கையை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்தார்....
Ad Widget

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவது தொடர்பில் அவதானம்!

அரச ஊழியர்களுக்கு தனியார் துறையில் பணி புரிவதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய இவ்வாறு தனியார் துறையில் பணி புரிய விரும்பும் அரச ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விடயம்...

யாழில் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன...

பேருந்துகளை தள்ளிக்கொண்டு வந்து பருத்தித்துறையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை தமது...

எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை!

யாழில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் தனது பயணத்தை அருட்தந்தையர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார். நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருட்தந்தை ஒருவர். தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்காணப்படுவதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள் தற்போது நாட்டில் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை...

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ளவர்களால் தாக்கப்பட்ட இளைஞன் பரிதாபச் சாவு!!

யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலரே இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாக அவரது ஊரவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உடனடியாக...

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை!!

கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு...

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் -புதிய அட்டவணை வெளியானது!

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்றைய தினம் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில்...

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம்!

தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

இலங்கைக்கு 800 மில்லியன் டொலர் வழங்கிய ரஷ்யா – பயன்படுத்தாமல் விட்ட அரசாங்கம்

ரஷ்யாவிடமிருந்து உதவிகளை பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் எதுவும் இதுவரை இலங்கை பயன்படுத்தப்படவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை - ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் இலங்கை - ரஷ்ய நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடைபெற்றது....

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!!

உக்ரைனும் மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் மற்றும் மால்டோவாவை இக்கூட்டமைப்பில் சேர்வதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen இது ஒரு வரலாற்று தருணம் எனவும், "ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல நாள்" என்று ட்வீட் செய்துள்ளார். "உங்கள் நாடுகள் எங்கள் ஐரோப்பிய...

ரஷ்ய தரப்பிடம் சிக்கிய பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!!

உக்ரைனில் சண்டையிட்டதற்காக ரஷ்ய ஆதரவு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (DPR) என்று அழைக்கப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நீதிமன்றத்தால் பிரித்தானியாவை சேர்ந்த ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகியோருக்கு மரண தண்டனை...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி!!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார (electronic) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பான் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் (22) ஜப்பான் செல்லும் 12 பேர் கொண்ட...

யாழில் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்த வேளை , நல்லூர் பிரதேச செயலர் , தமது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க...

சுகாதார சேவை ஸ்தம்பிக்கும்! யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை!!

எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வட மாகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்குமான ஒரே ஒரு போதனா...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண- அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 63 வயதுடை நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டீசல் பெறுவதற்காக சுமார் ஏழு நாட்களாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாள் தாமதமாகும் பெற்றோல் கப்பல்!

92 ரக பெற்றோல் 40,000 மெட்ரிக் தொன்னுடன் இன்று (23) காலை இலங்கையை வந்தடைய இருந்த கப்பல் சுமார் ஒரு நாள் தாமதமாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகர தன்னுடைய டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றும் நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட...

அகதிகளை தடுப்பதற்கு இலங்கையில் அலாரம் பூட்டிய படகுகள்!

அகதிகளைக் கடத்துவதற்கு மீன்பிடிப்படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு சிறிலங்காவிலுள்ள சுமார் நாலாயிரம் படகளில் GPS பொருத்துவதற்கு ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்யவுள்ளது. இவ்வாறு GPS பொருத்தப்படவுள்ள படகுகள் தலைமை மையமொன்றிலிருந்து அவதானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைதந்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Clare O’Neil கொழும்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சுமார் ஐந்து லட்சம் டொலர் செலவில் இவ்வாறு...
Loading posts...

All posts loaded

No more posts