எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒன்றரை நாள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீடு திரும்பிய பின்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி பண்டராகமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சென்று வீடு திரும்பிய பின்னரே...

சுகாதார ஊழியர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

சுகாதார ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள செல்லக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ருவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி, எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிலையங்களின் விபரங்கள்…
Ad Widget

கூட்டமைப்பினரை பகிரங்கமாக எச்சரித்தார் சரத் வீரசேகர!!

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர்...

இனப்பிரச்சினைக்கு தீர்வை காணத்தவறியதாலேயே நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது- சம்பந்தன்

நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீர்க்கப்படாத பிரச்சினை சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் தவறவிட்ட பல வரலாற்று...

யோகா தின நிகழ்வில் ரணில் பங்கேற்பு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காலில் முள் குத்தி சிகிச்சைப் பெற்ற இளைஞன் உயிரிழப்பு!

காலில் முள் குத்தியதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த 28 வயதுடைய தருமராசா மதிகரன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி வைத்திய சாலையில் சிகிச்சை...

போர் காலத்தில் புதைக்கப்பட்ட 7 பரல் மண்ணெண்ணெய் மீட்பு!!

போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் முல்லைத்தீவு உடையார் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையை அடுத்து...

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று 24ஆம் திகதி நாட்டை வந்தடைகின்றது!

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கப்பலில் 35 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எது...

சீனி விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்?

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனி கிலோகிராம் ஒன்று தற்போது சந்தையில் 265 ரூபா முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில்...

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இது அரசிதழில் வெளியிடப்பட உள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டவரைவில் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நேற்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரைவு பல தடவைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் மற்றும்...

ரஷ்யாவை கைவிட்ட மேற்குலக நாடுகள் – நேசகரம் நீட்டிய சீனா

சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா மாறியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு மேற்குலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு கச்சா எண்ணெயை தள்ளுபடியில் விற்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடான சவுதி அரேபியாவை விட, ரஷ்யாவின்...

ரணில் விக்கிரமசிங்கவினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது – மைத்திரி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றினைந்து செயற்பட்டுள்ளேன். அவரால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. நாட்டின் தற்போதைய அவலநிலைமையினை கண்டு பெரும் மனவேதனையடைகிறேன். சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து புதியஅரசாங்கத்தை ஸ்தாபிப்பது சகல தரப்பினரதும் பிரதான கோரிக்கையாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (20)...

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி வெளியீடு!

பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அனைத்து மின்சார விநியோக சேவைகளைளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும்...