Ad Widget

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி வெளியீடு!

பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் அனைத்து மின்சார விநியோக சேவைகளைளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு உட்பட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts