Ad Widget

மின்வெட்டு மீண்டும் அமுலுக்கு

நாடளாவிய ரீதியில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 2 ஆம் திகதி 5 ஆம் திகதி வரையான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஜூன் 2 ஆம் திகதி மற்றும் 3 ஆம் திகதி 2 மணிநேரமும், ஜூன் 4 ஆம் திகதி ஒரு மணிநேரமும்...

ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழிலும் போராட்டம்!

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர். வடக்கு கிழக்கு தழுவிய...
Ad Widget

அதிக போதைப் பொருள் பாவனை இரு இளைஞர்கள் பலி!!

அளவுக்கு அதிகமான போதைப் பொருள் உள்ளீர்த்ததால் உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. திடீர் சுகயீனமடைந்ததாக கூறி வித்திராஸ் – மௌசாட் (வயது 35), மகேந்திரன் பிரதீப் (வயது 26) என்ற இருவரே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்ததாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள்...

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருந்துகள் 12 நாட்களாக விமான நிலையத்தில் தேக்கம் !

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நாட்டை வந்தடைந்து 12 நாட்கள் கடந்துள்ள போதும், அவற்றை கட்டுநாயக்கவில் இருந்து விடுவிப்பதற்கு...

யாழ். விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை – பிரதமர்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பொருளாதார நெருக்கடி காரணமாக மூடவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்திருந்த நிலையில் அது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகங்கள் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது, "இலங்கையிலுள்ள எந்தவொரு விமான...

யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள்!

தமிழர்களின் அறிவுப் புதையல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் எரியூட்டப்பட்டது. இன உரிமைப் போராட்டத்த்தை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன...

சிறுமியை வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்ததாகவும் முயற்சி கைகூடாத நிலையில் சேற்றில் அமிழ்த்தி கொலை செய்ததாகவும் கைதான “கொத்து பாஸ்” பரபரப்பு தகவல்

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பெரிய பள்ளிவாசல் அருகே வசித்த 9 வயதான பாத்திமா ஆய்ஷா அக்ரம் எனும் சிறுமியின் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 'பல்லி குட்டி' என்ற புனை பெயரால் அறியப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான 28 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....

வவுனியாவில் தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமனாரின் அரவணைப்பில் வசித்து வசந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற...

உணவுப் பாதுகாப்பிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான அரச-தனியார் கூட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் பயிர்ச் செய்கையைக் கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளையும்...

8 நாட்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்புகிறது சமையல் எரிவாயு விநியோகம்!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...

இந்திய பயணிகளுடன் மாயமான விமானம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம், மனபதி ஹிமல் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. நான்கு இந்திய பயணிகள் உள்ளிட்டோருடன் பொக்காராவில் இருந்து கோம்சோம் நகருக்கு காலை 9.55 மணிக்கு புறப்பட்ட தாரா ஏர் நிறுவனத்தின் விமானம், 15 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்....

ரஷ்ய ஜனாதிபதி புடினின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளாரா??

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். பிரெஞ்சு தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், ரஷ்ய தலைவர் ஒவ்வொரு நாளும் பொதுவில் தோன்றுகிறார். அத்துடன் எந்த ஒரு நல்ல மனிதனும் நோயால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின்...