Ad Widget

புலமைப்பரிசில் ஊடான 6ம் ஆண்டு அனுமதிக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

புலமைப்பரிசில் ஊடான 6ம் ஆண்டு அனுமதிக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின தமிழ் மொழி மூலப்பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் வருமாறு

நல்லூரில் எரிவாயு விநியோகத்தை நிறுத்திய பிரதேச செயலர்!! மக்கள் மத்தியில் குழப்பம்!!

நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது, பிரதேச செயலரின் தலையீட்டினால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டது. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான எரிவாயுவை நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின ஊடாக பங்கிட்டு அட்டை அடிப்படையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதனை அறிந்து பெருமளவான மக்கள்...
Ad Widget

யாழில் சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி பகுதியில் சமையல் எரிவாயு விநியோகிக்க வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பரமேஸ்வரா சந்தி பகுதியில் உள்ள லிட்ரோ முகவர் நிலையத்தில் கடந்த சில நாட்களாக எரிவாயு வழங்கப்படுவதாக கூறிவந்தாலும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக எரிவாயு...

குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம்!!

அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 17 இலட்சத்து 65...

இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொதியில் சுமார் 40 மில்லியன் பெறுமதியான உணவுப் பொட்டலங்கள் அடங்கியுள்ளதுடன், கிளிநொச்சி மக்களின் பொருளாதார...

மோட்டார் சைக்கிளுக்கு 2,500 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள்!

வாகனங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோக நடைமுறை இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் தொடரும் என அமைச்சர் அறிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். மோட்டார் சைக்கிளுக்கு அதிகபட்சம் 2,500 ரூபாய்க்கும் முச்சக்கர வண்டி 3,000 ரூபாய்க்கும் கார், வான்கள் மற்றும்...

இராணுவத்தால் எங்கள் நாடே இரத்தமாக ஓடியது! சீமான் காட்டம்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பில் காங்கிரஸ் கட்சிக்கு நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய போது, ராஜீவ் காந்தி என்ன தியாகியா? அவர் தானே ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். ஒரு...

புடினின் உக்ரைன் தாக்குதல்களை கண்டித்து ராஜதந்திரி ஒருவர் பதவி விலகினார்!

உக்ரைனுக்கு எதிராக புடினின் போருக்கு எதிர்ப்பு வெளியிட்டு ரஷ்ய ராஜதந்திரி ஒருவர் பதவிவிலகியுள்ளார். "இரத்தம் தோய்ந்த, புத்திசாலித்தனமற்ற" போருக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் தமது பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான துாதகத்தில் பணிபுரியும் பொண்டரேவ் என்பவரே தமது பதவியை விட்டு விலகியுள்ளார். இந்தப் போரை, உக்ரைனிய மக்களுக்கு எதிரான...

ஊர்காவற்துறை – காரைநகர் பாதை சேவை இடைநிறுத்தம்!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகு:ம் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும்...

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை வெளியாகின்றது!

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலும் 4ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு!

வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப்...

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து...

சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று செலுத்தப்பட்டுதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

பெற்றோல், டீசலின் விலைகள் 400 ரூபாயைத் தாண்டியது!!

நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் 400 ரூபாயைத் தாண்டியது. இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான எரிபொருள்களும் 400 ரூபாயைக் கடந்துள்ளது. இதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் 82 ரூபாயினால் அதிகரித்து 420...