Ad Widget

மழைக்கு மத்தியில் கொழும்பில் தொடரும் போராட்டம்!

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி அலுவலகம் எதிரே முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கிறது. நேற்றமுன்தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டம் இன்று மழைக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை – முக்கிய அறிவிப்பு!!

11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமைபோன்று இயங்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Ad Widget

ஜனாதிபதிக்கு எதிராக காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை வரையிலும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றமையை சமூக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இந்தப்...

வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை – மழை தொடரும்!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும்மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு,...

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரணப் பொதி!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை...

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடல் வழியாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல்...

மணியந்தோட்டத்தில் கொன்று புதைத்த பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது. அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த மூன்று (12.04.2022 வரை)நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த மழை இடியுடன் கூடிய மழையாக இருக்கும் என்பதனால் இடி மின்னல் நிகழ்வு...

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்!!

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார். அத்துடன், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அரசாங்கத்தின்...

புத்தாண்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!

ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை – சுமந்திரன்

ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்தமை, ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்...

சங்கிலியன் சிலை முன்பாக போராட்டம்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் அ.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது

11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை : அறிவிப்பு வெளியானது!

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை!

தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான முக்கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 6 ஆம் திகதி , புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர்...

கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிக்க நடவடிக்கை!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன் விலை மேலும்...

வவுனியாவில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ( வியாழக்கிழமை) மதியம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் ஏற்பாட்டில் வவுனியா, பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேரூந்து...

புதிய அமைச்சரவை நியமனம்?

எதிர்வரும் தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் சில நாட்களில் இந்த நெருக்கடிகளை தீர்க்க முடியும் என பாராளுமன்ற...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதியில் வைத்து அவர் நேற்று (05) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். இளைவாலை பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்ட...

லைக்கப்படுகின்றது இலங்கை நாடாளுமன்றம்?

நாடாளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காண்பித்த இரா.சாணக்கியன் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts