Ad Widget

கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. செரன்டிப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்...

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்!

தேசிய ரீதியில் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினால் நாடுதழுவிய ரீதியாக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட கால அடிப்படையில் காணப்படும் சம்பள முரண்பாடுகள்,...
Ad Widget

உணவுப் பொதி ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிப்பு!

உணவுப் பொதியின் விலையானது இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. மேலும், கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தன் காரணமாக, இந்த...

32 ஆண்டுகளுக்கு பிறகு என் கனவு பலித்தது!

பேரறிவாளன் சுதந்திர மனிதராக நடமாட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு பலித்தது என அற்புதம்மாள் தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தரப்பில் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரரான பேரறிவாளன் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில்...

மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் பரிதாபமாக உயிரிழப்பு!!

மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.புத்தூரில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது. சம்பவத்தில் மாசிலாமணி குகபிரகாசம் (வயது-59) அவரது மனைவி குகபிரகாசம் சுகுனா (வயது- 55) என்பவர்களே உயிரிழந்தனர். மின் இணைப்பு வயர் துண்டித்து தண்ணீரில் மின் ஒழுக்கு ஏற்பட்டதால் இந்த இடர் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர். மகள்...

டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு ஒளடதங்களின் விலைகளை அதிகரிக்க அனுமதி!

டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு, ஒளடதங்களின் விலைகளை நியாயமான அளவில் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒளடத இறக்குமதியாளர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அத்துடன், ஒளடதங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு!

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவையே பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டிடத்தின் வரலாற்று பின்னணி மந்திரி மனை...

டீசலின் விலை 75 ரூபாயினாலும், பெற்றோலின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிப்பு!!

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது, நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக Petrol...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கிய குடும்பம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம், கனடா நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில், குறித்த உதவி...

கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை!

எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை கிளிநொச்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு காணப்படுவதுடன் டோக்கன் நடைமுறையும் காணப்படுகின்றது. அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கும் மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளே வழங்கப்படுவதன் காரணமாக வாடகை வாகன சாரதிகள் நாளாந்தம்...

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி அலகு மூடப்பட்டது!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் GT-7 இன் ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டுள்ளது. டீசல் இல்லாத காரணத்தினால் இன்று(வியாழக்கிழமை) காலை திடீரென மூடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார். GT-7 ஆலையின் செயல்பாடுகள் காலை 7:21 மணிக்கு திடீரென நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். அனல்மின் நிலையம் நிறுத்தப்பட்டதால், தேசிய...

மீண்டும் பால் மாவின் விலை பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றது?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5...

யாழ்.பல்கலை மருத்துவபீட, போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறிதிருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுவதாகவும், இதன்காரணமாகவே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலும் டீசலின் கையிருப்பு குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த...

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்!

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய அமைச்சின் செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றருக்கு மேலதிகமாக விசேட கடமைகளுக்காக...

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சினால் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார...

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை!!

367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனுமதிப்பத்திரம் இன்றி அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உரிம முறையின் கீழ், ஒவ்வொரு இறக்குமதியாளரும் தங்கள் இறக்குமதிகளை தொடர்பாக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். அனுமதிக்கு முன் அந்த நேரத்தில்...

யாழில் அதிநவீன உல்லாச படகுச் சேவை திறந்து வைப்பு

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல்...

சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய இளைஞன் பொலிஸாரினால் கைது!

15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும் 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு...

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து புதிய எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல் !

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எண்ணெய்க் கப்பலுக்கான கட்டணம் முன்னர் 32 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டது என கூறினார். இருப்பினும் சிங்கப்பூர் நாணய விகிதங்களுடன் ஒப்பிடுகையில்...
Loading posts...

All posts loaded

No more posts