Ad Widget

மாடுகளுக்கு குறி சுடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயற்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,எமது அன்புக்குரிய பசுக்களுக்கு, காளைகளுக்கு...

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி!!

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறையும் 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச...
Ad Widget

சீனாவில் மீண்டும் கொரோனா – மீண்டும் ஊரடங்கு!

கொரோனா வைரஸ் முதல் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அதன்பின் உலகம் முழு வதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று 3 மாதத்துக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ்பாதிப்பு அதிகரித்து வருகிறது....

டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது....

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியினை விமர்சித்தால் சட்ட நடவடிக்கை?

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை விமர்சித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தற்காலிக பணிப்பாளர் நியமனம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்று (திங்கட்கிழமை) இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர்.த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்!!

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதனால் மட்டும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாது என பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவைக் கூட்டி, சட்டக் கட்டமைப்பின் மூலம் தனியார்...

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு கோரிக்கை

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, தற்போது பரவிவரும் ஒமிக்ரோன், கொவிட் 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை...

யாழில் தடுப்பூசி பெறுவதில் கர்ப்பிணித்தாய்மார்கள் ஆர்வமில்லை; ஆபத்துக் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிக்கை!!

யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. தடுப்பூசியானது ஏனையவர்களைப் போலவே கர்ப்பவதிகளை கோவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் மிக கணிசமான அளவில் குறைக்கும். மாறாக இத்தடுப்பூசியானது அதனைப் பெற்றுக்கொள்ளும் கர்ப்பவதிக்கோ, அவரது சிசுவிற்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு...

இந்து ஆலய விக்கிரங்கள் திருட்டு தொடர்பில் இராணுவச் சிப்பாய் கைது

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இராணுவ பொலிஸாரினால் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள...

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைப்பதா? – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

பட்டத்திருவிழாவுக்கு சிறிலங்கா இனப்படுகொலை அரசின் பங்காளிகளையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், விருந்தினர்களாக அழைக்கும் முடிவை ஏற்பாட்டாளர்கள் உடன் நிறுத்த வேண்டும். தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சியின் அங்கமாக, இப் பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே, எதிர்வரும் காலங்களில் இந்நிகழ்வு வரலாற்றில் பதியப்படும் என தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது – அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திகக்கூடிய கொரோனா தொற்றின் மாறுபாடாக இது மாற்றமடையலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் நதீகா ஜனகே இதனை...

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு – விசேட அறிவிப்பு வெளியானது!

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குருநகரில் கத்திக்குத்து – மூவர் வைத்தியசாலையில்!

குருநகர் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம்(திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

டிக்டொக் வீடியோ தொடர்பாக ஏற்பட்ட தகராறு – கொழும்பில் 17 வயது சிறுவன் கொலை!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். டிக்டொக் காணொளியால் ஏற்பட்ட தகராறையடுத்து, குறித்த சிறுவன் மேலும் இருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு குழு அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ்...

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம்

ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஒளடத இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லையெனவும் அந்த சங்கம்...

யாழ். வளைவுக்கு அருகில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து!

யாழ்.வளைவுக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது , யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி முழுகடையடைப்பு போராட்டம்!!

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24...

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி மேலும் 24 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி உயிரிழந்தவர்களில் 20...

இன்று முதல் மீண்டும் மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் இடைநிறுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நிலவும் அந்நிய கையிருப்பு நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்களின் விளைவாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தேவையான மசகு எண்ணெயை பெற்றுக் கொண்டதன்...
Loading posts...

All posts loaded

No more posts