Ad Widget

புதிய அடையாளத்துடன் விநியோகிக்கப்படுகின்றது எரிவாயு சிலிண்டர்கள்!

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் சிலிண்டரை மீள நுகர்வோருக்கும் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விற்பனை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரில் ஒரு வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய சிலிண்டர்கள் வால்வுகளில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறை இடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. 3 நிபந்தனைகளின் அடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி

கடுமையான நிபந்தனைகளின் கீழ் எரிவாயு நிறுவனங்களுக்கு உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவற்றுக்கு தொழில்நுட்பக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் விநியோகத்தை மீள ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. முன்பு இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு பங்குகளை சந்தைக்கு வெளியிடக்கூடாது...
Ad Widget

இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு?

இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால் இதுகுறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க...

24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் விருத்தியடையும் சூறாவளி – மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று வட அகலாங்கு 12.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.5நு இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக்...

இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் – முதல் நபர் அடையாளம்!

இலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே ஒமிக்ரோன் தொற்றுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பரவலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட...

வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் திருட்டு -பொலிஸார் விசாரணை

வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் தாதியின் அறை உடைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மற்றும் உணவுப் பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி திருமதி றதினி காந்தநேசன் தெரிவித்துள்ளார். குறித்த மருத்துவமனையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் திருமதி சசிகலாராணி விஜயசுகுமார் (வயது-57) என்பவரின் அறையே இவ்வாறு உடைக்கப்பட்டுப் பணம் மற்றும் உணவுப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்று...

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடையின் நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரனின் நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது . நேற்று மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்மை அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும்,...

அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள் – சமையல் எரிவாயு விநியோகத்திற்கு தடை!

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று (3) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயுவின் தரம் குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரையில், இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேநேரம்,...

வடக்கில் சீனா இடைநிறுத்திய மின் நிலையங்களை அமைக்க இந்தியா முன்வர வேண்டும் – மனோ

வடக்கு தீவுகளில் சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள...

‘கடற்படைக்கு காணி வழங்கப்படும் என நான் கூறவில்லை’ – வடக்கு ஆளுநர்

” மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை.” என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து சில ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பில், இன்று தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (வியாழக்கிழமை) அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன...

நல்லூர் பகுதியிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் சமையலின் போது எரிவாயு அடுப்பு எரிவதை அவதானித்த வீட்டு உரிமையாளர், இது தொடர்பில் அருகிலுள்ள வர்த்தக நிலையத்துக்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய...

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மழை உடனான காலநிலையின் பிற்பாடு டெங்கு...

எரிவாயு கலவையை மாற்றியமைத்தமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது!!

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உள்நாட்டு LPG எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவையை மாற்றியமைத்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தை பகிர்ந்துள்ள எம்.பி, “லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 18 லீற்றர் சிலிண்டரின் எடையை 12.5 கிலோவிலிருந்து 9.2 கிலோவாக மாற்றியபோது, ​​20:80...

எந்த நேரத்திலும் முழு இலங்கையும் இருளில் மூழ்கக்கூடும்? – முக்கிய அறிவிப்பு வெளியானது!

மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார். சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையினால், 8 மணிநேரத்திற்கு மேலதிகமாக பணிப்புரிய போவதில்லை...

அராலியிலும் இரண்டு வீடுகளில் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறின!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவிலுள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும், 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் வெடித்துச் சிதறியுள்ளன. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு வீட்டினரால் நேற்று (புதன்கிழமை) முறைப்பாடு பதிவு...

தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

மன்னார் – தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு நேற்றையதினம் மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்களாக 50...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமையநேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 744 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 564,733 ஆக அதிகரித்துள்ளது.

நமது நாட்டிற்கு குறித்த பிறழ்வு வரவில்லை என எவராளும் கூற முடியாது!!

ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்... “இது தொடர்பில் உறுதியாக கூற...

காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!!

மாதகலில் கடற்படை முகாம் அமைப்பதற்கு தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று மதியம் ஒரு மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் மாதகல் காணி உரிமையாளர்கள் மற்றும்...
Loading posts...

All posts loaded

No more posts