Ad Widget

பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா கொத்தணிகள் – மீண்டும் மூடப்படுகின்றன பாடசாலைகள்?

பாடசாலைகளுக்குள்ளும் கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். “பாடசாலை கட்டமைப்புக்குள் நிர்வாகப் பிரிவினர்...

யாழில் “உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் திட்டம் ஆரம்பம்!

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை நேற்றையதினம் மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக “உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் பிரதான...
Ad Widget

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி. போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றும் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி...

வெளிநாடு பயணமாகும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி போட்டிருப்பது அவசியமில்லை!!

இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பதுவன்துதாவ இதனைத் தெரிவித்துள்ளார். பயணம் செய்யும் நாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விமானத்தைப் பொறுத்து தடுப்பூசி விதிமுறைகள் மாறுபடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்....

எரிவாயு விவகாரம் தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம்!! மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

எரிவாயு விவகாரம் தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம் குறித்து இலங்கை கட்டளைகள் நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 533ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா...

யாழ். ஈச்சமோட்டை மறவர்குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது . யாழ் மாநகர முதல்வரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

யாழில் சேர்.பொன் இராமநாதனின் 91ஆவது குருபூசை அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத்துக்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவனரும் சைவப் பெரு வள்ளலாருமான சேர்.பொன் இராமநாதனின் 91ஆவது குருபூசை, இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர்.பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும் சபா மண்டபத்திலுள்ள உருவப்படத்துக்கும் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா...

யாழ்ப்பாணம் உள்பட பல பிரதேசங்களில் மழை பெய்யும் என எதிர்வுகூறல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது...

அடுத்த வருடம் பிரதமர் பதவியில் மாற்றம்?

எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நேற்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இதில்...

வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் ஒதுங்கியதா?

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலத்தை சின்பான்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி பொலிஸார் புதைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக கரை ஒதுங்கிய...

சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாக செயற்படவேண்டும்!!

கோவிட்-19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் சிலர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று முறைப்பாடுகள் கிடைக்கின்றன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகளை சவக்காரம் இட்டுக் கழுவுதல்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 748 பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 67 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 21 பேர்...

இன்றும் நாளையும் ஒரு மணித்தியால மின்வெட்டு!!

நாடளாவிய ரீதியில் இன்றும் (07), நாளையும் (08) தினசரி ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்றும், நாளையும் மாலை 06 மணி முதல் 9.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எரிவாயு களஞ்சியசாலையை இடமாற்ற கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

நாடு முழுவதும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவரும் நிலையில் தமது உயிருக்கு பாதுகாப்பு தேடும் வகையில் லிட்ரோ காஸ் விநியோகஸ்தர் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி, மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியில் அமைந்துள்ள லிட்ரோ காஸ் விநியோகஸ்தர் நிலையத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை)...

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கை

நேற்று (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒரு வார காலப் பகுதியை யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

பெண்ணை கடத்திய வாகனம் விபத்தில் – ஒருவர் பலி!

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதேவேளை, குறித்த டிப்பர் வாகனத்தினை சிலர்...

‘ஜனவரியில் கோவிட்-19 புதிய அலை உருவாகும் அபாயம்’!!

பண்டிகைக் காலங்களில் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயத்தை கவனத்தில் கொள்ளாவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் வைரஸ் வேகமாகப் பரவுவதைக் காண முடியும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் போதும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியமானது என அதன் செயலாளர், மருத்துவர் செனல் பெர்னாண்டோ...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் மேற்படி சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் 15 அன்று மூடப்பட்டது. தொடர்ச்சியாக 50 தினங்களுக்கு மேற்படி சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில்...

இலங்கையில் மேலும் 741 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 741 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 68 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 688 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...
Loading posts...

All posts loaded

No more posts