Ad Widget

பாடசாலைக்கு செல்லாமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் !

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடமைக்கு சமுகமளிக்க அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி...

இழுவைப்படகுகளை தடை செய்யக் கோரும் கடல்வழிப் போராட்டம் முல்லைத்தீவில் ஆரம்பமாகி பருத்தித்துறையில் நிறைவு

தமிழர் தாயக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் நேற்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை முற்பகல் 9.30 மணியளவில் வந்தடைந்தது. இழுவைப் படகு மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு...
Ad Widget

“அவசியமற்ற பயணங்களை டிசெம்பர் வரை தவிருங்கள்” – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

அவசியமற்ற பயணங்களை குறைந்தபட்சம் டிசெம்பர் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. தினமும் சுமார் 700 கோவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில், தேவையற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேலா குணவர்தன தெரிவித்துள்ளார். இது உறவினர்களைப் பார்க்கவோ அல்லது...

ஒக்டோபர் 21இல் வடமாகாணத்தில் ஆரம்பப் பாடசாலைகள், முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான பணிகள் நிறைவு!!

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளது என்று மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அன்றைய தினமே முன்பள்ளிகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்....

எரிபொருள் விலையை உடனடியாக அதிகரியுங்கள் – அதிகரிக்கும் அழுத்தம்

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியாது. எனவே பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் ஆகியன அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் அனுமதியை பெற்று எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இல்லாத போதிலும்...

உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு – வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்கள்

விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாகவும் இன்று காலை 9 மணிமுதல் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான போராட்டம் தற்போது...