Ad Widget

“அவசியமற்ற பயணங்களை டிசெம்பர் வரை தவிருங்கள்” – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

அவசியமற்ற பயணங்களை குறைந்தபட்சம் டிசெம்பர் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

தினமும் சுமார் 700 கோவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில், தேவையற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேலா குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது உறவினர்களைப் பார்க்கவோ அல்லது உல்லாசப் பயணங்களில் ஈடுபடவோ ஒரு காலம் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு டிசெம்பர் இறுதி வரை பயணத்தை குறைக்குமாறு அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

Related Posts